sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

கோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா: வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி

/

கோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா: வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி

கோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா: வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி

கோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா: வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி


ADDED : அக் 31, 2024 06:54 PM

Google News

ADDED : அக் 31, 2024 06:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாட்டோகிராம்: வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இன்னிங்ஸ், 273 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி, தொடரை 2-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.

வங்கதேசம் சென்ற தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது டெஸ்ட் சாட்டோகிராமில் நடந்தது. தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 575/6 ('டிக்ளேர்') ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 38/4 ரன் எடுத்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் மோமினுல் ஹக் (82) அரைசதம் கடந்தார். கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (9), முஷ்பிகுர் ரஹிம் (0) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்றினர். வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 159 ரன்னுக்கு சுருண்டு, 'பாலோ-ஆன்' பெற்றது. தென் ஆப்ரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட் சாய்த்தார்.

பின் 2வது இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணி, தென் ஆப்ரிக்க 'சுழலில்' சரிந்தது. கேப்டன் ஷான்டோ (36), ஹசன் மஹ்முத் (38*) ஆறுதல் தந்தனர். வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 143 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் கேஷவ் மஹாராஜ் 5, முத்துசாமி 4 விக்கெட் சாய்த்தனர்.

ஆட்ட நாயகன் விருதை தென் ஆப்ரிக்காவின் டோனி டி ஜோர்ஜி (177 ரன்) வென்றார். தொடர் நாயகன் விருதை தென் ஆப்ரிக்காவின் ரபாடா (14 விக்கெட்) கைப்பற்றினார்.






      Dinamalar
      Follow us