/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தென் ஆப்ரிக்கா வெற்றி: முத்தரப்பு லீக் போட்டியில்
/
தென் ஆப்ரிக்கா வெற்றி: முத்தரப்பு லீக் போட்டியில்
ADDED : ஜூலை 14, 2025 11:22 PM

ஹராரே: முத்தரப்பு 'டி-20' தொடரை தென் ஆப்ரிக்க அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.
ஜிம்பாப்வேயில், முத்தரப்பு 'டி-20' தொடர் நடக்கிறது. இதில் ஜிம்பாப்வே, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. ஹராரேயில் நடந்த முதல் போட்டியில் ஜிம்பாப்வே, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் வான் டெர் துசென், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் (30), ரியான் பர்ல் (29) கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய கேப்டன் சிக்கந்தர் ராஜா (54*) அரைசதம் கடந்தார். ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 141 ரன் எடுத்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் ஜார்ஜ் லிண்டே 3 விக்கெட் வீழ்த்தினார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு ரீசா ஹென்டிரிக்ஸ் (11), வான் டெர் துசென் (16) சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ரூபின் ஹெர்மன் (45), டிவால்ட் பிரவிஸ் (41) நம்பிக்கை தந்தனர். தென் ஆப்ரிக்க அணி 15.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 142 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கார்பின் போஷ் (22), ஜார்ஜ் லிண்டே (4) அவுட்டாகாமல் இருந்தனர்.