/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தென் ஆப்ரிக்க அணி அபாரம்: 106 ரன்னுக்கு சுருண்டது வங்கம்
/
தென் ஆப்ரிக்க அணி அபாரம்: 106 ரன்னுக்கு சுருண்டது வங்கம்
தென் ஆப்ரிக்க அணி அபாரம்: 106 ரன்னுக்கு சுருண்டது வங்கம்
தென் ஆப்ரிக்க அணி அபாரம்: 106 ரன்னுக்கு சுருண்டது வங்கம்
ADDED : அக் 21, 2024 11:08 PM

மிர்பூர்: தென் ஆப்ரிக்க பவுலர்கள் அசத்த, வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 106 ரன்னுக்கு சுருண்டது.
வங்கதேசம் சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நேற்று, மிர்பூரில் முதல் டெஸ்ட் துவங்கியது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த வங்கதேச அணிக்கு வியான் முல்டர் தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' ஷாத்மன் (0), மோமினுல் ஹக் (4), கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (7) வெளியேறினர். ரபாடா பந்தில் முஷ்பிகுர் ரஹிம் (11), லிட்டன் தாஸ் (1), நயீம் ஹசன் (8) அவுட்டாகினர். மஹ்முதுல் ஹசன் ஜாய் (30) ஆறுதல் தந்தார். கேஷவ் மஹாராஜ் 'சுழலில்' மெஹிதி ஹசன் மிராஸ் (13), ஜாகர் அலி (2), தைஜுல் (16) சிக்கினர்.
வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 106 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தென் ஆப்ரிக்கா சார்பில் ரபாடா, முல்லர், மஹாராஜ் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு டோனி டி ஜோர்ஜி (30), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (23), ரியான் ரிக்கல்டன் (27) கைகொடுத்தனர். தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 140 ரன் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சமின்மையால் முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. வெர்ரின்னே (18), முல்டர் (17) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட் கைப்பற்றினார்.
ரபாடா '300'
வங்கதேசத்தின் முஷ்பிகுர் ரஹிமை அவுட்டாக்கிய தென் ஆப்ரிக்காவின் ரபாடா, தனது 300வது டெஸ்ட் விக்கெட்டை பதிவு செய்தார். மூன்று விக்கெட் சாய்த்த இவர், 65 டெஸ்டில், 302 விக்கெட் கைப்பற்றி உள்ளார். டெஸ்ட் அரங்கில் 300 விக்கெட் வீழ்த்திய 6வது தென் ஆப்ரிக்க பவுலரானார். ஏற்கனவே ஸ்டைன் (439 விக்கெட்), போலக் (421), நிடினி (390), டொனால்டு (330), மார்னே மார்கல் (309) இம்மைல்கல்லை எட்டினர்.
* குறைந்த டெஸ்டில் 300 விக்கெட் சாய்த்த தென் ஆப்ரிக்க பவுலர்கள் பட்டியலில் 3வது இடம் பிடித்தார் ரபாடா (65). முதலிரண்டு இடங்களில் ஸ்டைன் (61 டெஸ்ட்), டொனால்டு (63) உள்ளனர்.
* குறைந்த பந்தில் 300 விக்கெட் கைப்பற்றிய பவுலரானார் ரபாடா. இவர் 11,817 பந்தில் இந்த இலக்கை அடைந்தார். இதற்கு முன், பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் 12,602 பந்தில் 300 விக்கெட் சாய்த்திருந்தார்.
தைஜுல் '200'
ஐந்து விக்கெட் சாய்த்த தைஜுல் இஸ்லாம், டெஸ்ட் அரங்கில் 200 விக்கெட் கைப்பற்றிய 2வது வங்கதேச பவுலரானார். இவர், 48 டெஸ்டில், 201 விக்கெட் வீழ்த்தினார். ஏற்கனவே சாகிப் அல் ஹசன் 246 விக்கெட் சாய்த்துள்ளார்.