/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு: ரியான் ரிக்கெல்டன் சதம்
/
தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு: ரியான் ரிக்கெல்டன் சதம்
தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு: ரியான் ரிக்கெல்டன் சதம்
தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு: ரியான் ரிக்கெல்டன் சதம்
ADDED : டிச 05, 2024 10:10 PM

கெபேஹா: இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் தென் ஆப்ரிக்காவின் ரியான் ரிக்கிள்டன் சதம் விளாசினார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது டெஸ்ட் கெபேஹாவில் நடக்கிறது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு டோனி டி ஜோர்ஜி (0), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (4), டேவிட் பெடிங்காம் (6) ஏமாற்றினர். மார்க்ரம் (20) சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய கேப்டன் டெம்பா பவுமா (78) அரைசதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய ரியான் ரிக்கிள்டன் (101), டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். மார்கோ யான்சென் (4) ஏமாற்றினார்.
ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 269 ரன் எடுத்திருந்தது. கைல் வெர்ரின்னே (48) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் லகிரு குமாரா 3, அசிதா பெர்ணான்டோ 2 விக்கெட் கைப்பற்றினர்.