தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இலங்கை வலுவான முன்னிலை

இலங்கை வலுவான முன்னிலை

இலங்கை வலுவான முன்னிலை


ADDED : ஏப் 01, 2024 10:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2024 10:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாட்டோகிராம்: வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணி வலுவான முன்னிலை பெற்றது.

வங்கதேசம் சென்றுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்றது. இரண்டாவது டெஸ்ட் சாட்டோகிராமில் நடக்கிறது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 531 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 55/1 ரன் எடுத்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு ஜாகிர் ஹசன் (54) நம்பிக்கை தந்தார். தைஜுல் (22), மோமினுல் ஹக் (33) ஓரளவு கைகொடுத்தனர். கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (1), லிட்டன் தாஸ் (4) உள்ளிட்டோர் ஏமாற்றினர். வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 178 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஹசன் மஹ்மூத் (2) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் அசிதா பெர்ணான்டோ 4, விஷ்வா பெர்ணான்டோ, லகிரு குமாரா, பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

பின் 2வது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்னே (4), குசால் மெண்டிஸ் (2), தினேஷ் சண்டிமால் (9), கேப்டன் தனஞ்செயா டி சில்வா (1), கமிந்து மெண்டிஸ் (9) சோபிக்கவில்லை. நிஷான் மதுஷ்கா (34) ஆறுதல் தந்தார்.

ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 102 ரன் எடுத்து, 455 ரன் முன்னிலை பெற்றிருந்தது. மாத்யூஸ் (39), பிரபாத் ஜெயசூர்யா (3) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் ஹசன் மஹ்மூத் 4, கலீத் அகமது 2 விக்கெட் கைப்பற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us