தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/வெற்றியை நோக்கி இலங்கை

வெற்றியை நோக்கி இலங்கை

வெற்றியை நோக்கி இலங்கை


ADDED : ஏப் 02, 2024 09:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2024 09:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாட்டோகிராம்: வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற காத்திருக்கிறது.

வங்கதேசம் சென்ற இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்றது. இரண்டாவது டெஸ்ட் சாட்டோகிராமில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 531, வங்கதேசம் 178 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 102 ரன் எடுத்து, 455 ரன் முன்னிலை பெற்றிருந்தது. மாத்யூஸ் (39), பிரபாத் ஜெயசூர்யா (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. மாத்யூஸ் (56) அரைசதம் அடித்து அவுட்டானார். இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 157/7 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது.

இமாலய இலக்கு

அடுத்து 511 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கைத் துரத்தியது வங்கதேசம். மகமுதுல் (24), ஜாகிர் (19), கேப்டன் ஷாண்டோ (20) என 'டாப்-3' பேட்டர்கள் நிலைக்கவில்லை. மொமினுல் மட்டும் அதிகபட்சம் 50 ரன் எடுத்தார். 'சீனியர்' சாகிப் அல் ஹசன் 36, லிட்டன் தாஸ் 38 ரன் எடுத்தனர்.

நான்காவது நாள் முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 268/7 ரன் எடுத்திருந்தது. லகிரு குமாரா, ஜெயசூர்யா, மெண்டிஸ் தலா 2 விக்கெட் சாய்த்தனர். கைவசம் 3 விக்கெட் மட்டும் உள்ள நிலையில் வெற்றிக்கு 243 ரன் தேவைப்படுவதால், இலங்கை இன்று வெற்றி பெற காத்திருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us