/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோப்பை வென்றது இலங்கை: வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றி
/
கோப்பை வென்றது இலங்கை: வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றி
கோப்பை வென்றது இலங்கை: வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றி
கோப்பை வென்றது இலங்கை: வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றி
ADDED : அக் 27, 2024 10:47 PM

பல்லேகெலே: மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி ஆறுதல் வெற்றி பெற்றது. இலங்கை அணி 2-1 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.
இலங்கை சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இலங்கை, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி பல்லேகெலேயில் நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
இலங்கை அணிக்கு அவிஷ்கா (34) நல்ல துவக்கம் கொடுத்தார். இலங்கை அணி 17.2 ஓவரில், 81/1 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின், தலா 23 ஓவர் கொண்ட போட்டியாக தொடர்ந்தது. பதும் நிசங்கா (56), குசால் மெண்டிஸ் (56*) கைகொடுக்க, இலங்கை அணி 23 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 156 ரன் எடுத்தது.
பின், வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 23 ஓவரில் 195 ரன் என 'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எவின் லீவிஸ் (102*), ஷெர்பேன் ரூதர்போர்டு (50*) கைகொடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 22 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகன் விருதை எவின் லீவிஸ் (வெஸ்ட் இண்டீஸ்) வென்றார். தொடர் நாயகன் விருதை இலங்கையின் சரித் அசலங்கா (145 ரன், ஒரு விக்கெட்) கைப்பற்றினார்.