/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஸ்டீவ் ஸ்மித் 'குட்-பை': சர்வதேச ஒருநாள் போட்டிக்கு
/
ஸ்டீவ் ஸ்மித் 'குட்-பை': சர்வதேச ஒருநாள் போட்டிக்கு
ஸ்டீவ் ஸ்மித் 'குட்-பை': சர்வதேச ஒருநாள் போட்டிக்கு
ஸ்டீவ் ஸ்மித் 'குட்-பை': சர்வதேச ஒருநாள் போட்டிக்கு
ADDED : மார் 05, 2025 10:09 PM

துபாய்: சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு பெற்றார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் 35. பாகிஸ்தான், துபாயில் நடக்கும் ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து 'ரெகுலர்' கேப்டன் பாட் கம்மின்ஸ் காயத்தால் விலகியதால், ஸ்மித் அணியை வழிநடத்தினார். துபாயில் நடந்த அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவிடம் தோல்வியடைந்து வெளியேறியது.
இந்நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்மித் அறிவித்தார். இவர், 2010ல் (பிப். 19) மெல்போர்னில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 170 போட்டியில், 12 சதம், 35 அரைசதம் உட்பட 5800 ரன் எடுத்துள்ளார். கடந்த 2015, 2023ல் ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்தார். ஐ.சி.சி., சார்பில் ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டி வீரருக்கான விருதை இரண்டு முறை (2015, 2021) வென்ற ஸ்மித், ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டி அணியில் (2015) இடம் பிடித்திருந்தார். கடந்த 2015ல் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட இவர், 64 போட்டியில் (32 வெற்றி, 28 தோல்வி, 4 முடிவு இல்லை) அணியை வழிநடத்தினார். டெஸ்ட், சர்வதேச 'டி-20' போட்டியில் மட்டும் விளையாடப்போவதாக ஸ்மித் தெரிவித்தார்.
ஸ்மித் கூறுகையில், ''ஆஸ்திரேலியாவுக்காக ஒருநாள் போட்டியில் விளையாடியது சிறந்த பயணம். இதில் மறக்க முடியாத இனிமையான நிகழ்வுகள் அரங்கேறின. இரண்டு முறை உலக கோப்பை வென்றது தனிச் சிறப்பு. சரியான நேரத்தில் ஓய்வு பெற்றதால், வரும் 2027 உலக கோப்பைக்கு சிறந்த அணியை இப்போதிருந்தே தயார்படுத்திக் கொள்ளலாம்,'' என்றார்.