/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அடுத்தடுத்து ஆட்டநாயகன் மயங்க் * 17 ஆண்டு வரலாற்றில் முதன் முறையாக...
/
அடுத்தடுத்து ஆட்டநாயகன் மயங்க் * 17 ஆண்டு வரலாற்றில் முதன் முறையாக...
அடுத்தடுத்து ஆட்டநாயகன் மயங்க் * 17 ஆண்டு வரலாற்றில் முதன் முறையாக...
அடுத்தடுத்து ஆட்டநாயகன் மயங்க் * 17 ஆண்டு வரலாற்றில் முதன் முறையாக...
ADDED : ஏப் 03, 2024 11:42 PM

பெங்களூரு: ஐ.பி.எல்., தொடரின் 17 ஆண்டு வரலாற்றில் அறிமுகமான முதல் இரு போட்டியில் ஆட்டநாயகன் ஆன முதல் வீரர் என சாதனை படைத்துள்ளார் 'வேகப்புயல்' மயங்க் யாதவ்.
பெங்களூருவில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில், லக்னோ அணி(181/5), பெங்களூருவை (153/10) வீழ்த்தியது. இதில் லக்னோ அணி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், 14 ரன்னுக்கு 3 விக்கெட் சாய்த்து ஆட்டநாயகன் ஆனார். டில்லியை சேர்ந்த இவர், ஏற்கனவே அறிமுக போட்டியில் (பஞ்சாப்) 27/3 விக்கெட் சாய்த்து ஆட்டநாயகன் ஆனார். இதில் மணிக்கு 155.8 கி.மீ., வேகத்தில் பந்துவீசினார்.
இதையடுத்து 17 ஆண்டு ஐ.பி.எல்., வரலாற்றில் அறிமுகம் ஆன முதல் இரு போட்டியில் ஆட்டநாயகன் ஆன முதல் வீரர் என புதிய வரலாறு படைத்தார். தவிர இரண்டாவது போட்டியில் 156.7 கி.மீ., வேகத்தில் பந்து வீசினார். 2024 ஐ.பி.எல்., சீசனின் அதிவேக பந்துவீச்சாக இது அமைந்தது.
இந்திய கிரிக்கெட்டில் புதிய 'வேகப்புயலாக' உருவெடுத்துள்ள மயங்க் யாதவ் கூறியது:
எப்போதும் அதிவேகத்தில் பந்து வீசினால் போதும் என நினைப்பது இல்லை. எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு கைகொடுக்க வேண்டும் என்பது தான் முதல் திட்டம். அதேநேரம், பந்தின் வேகத்தையும் கூட்ட வேண்டும் என விரும்புவேன். மற்றபடி போட்டி முடிந்தபின் நான் வேகமாக வீசிய பந்து எது என ஆர்வமாக கேட்பேன். போட்டி நேரத்தில் பவுலிங்கில் மட்டும் தான் கவனம் செலுத்துவேன்.
''பந்துவீச்சில் புதியதாக முயற்சிக்க விரும்பினால், இதற்காக 'வேகத்தில்' சமரசம் செய்து கொள்ள வேண்டாம்,'' என இஷாந்த் சர்மா, சைனி உள்ளிட்டோர் தெரிவித்தனர். இதனால் எனது 'வேகத்தில்' குறைக்கும் வகையில் எவ்வித புதிய முறையையும் முயற்சிப்பது இல்லை.
ஐ.பி.எல்., தொடரில் முதல் இரு போட்டியிலும் ஆட்டநாயகன் ஆனது மகிழ்ச்சியாக உள்ளது. எனது அடுத்த இலக்கு, இந்திய அணிக்காக விளையாட வேண்டும். இதற்கான எனது பயணம் துவங்கிவிட்டது என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகிழ்ச்சியில் மணிமாறன்
தமிழக அணி சுழற்பந்து வீச்சாளர் மணிமாறன் சித்தார்த் 25. இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் பிறந்தவர். கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதால் சிறிய வயதில் தமிழகத்துக்கு வந்தார். ஏலத்தில் லக்னோ அணிக்காக ரூ. 2.40 கோடிக்கு வாங்கப்பட்டார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஏமாற்றினார் (0/21). இரண்டாவது போட்டியில் பெங்களூரு அணியின் கோலியை அவுட்டாக்கினார். இதையடுத்து ஐ.பி.எல்., அரங்கில் அறிமுக விக்கெட்டாக கோலியை வீழ்த்திய முதல் தமிழக வீரர், ஆறாவது இந்தியர் ஆனார்.
அவர் கூறுகையில்,''கோலியை அவுட்டாக்க வேண்டும் என்பது எப்போதும் கனவாக இருந்தது. ஏனெனில் இது மிகப்பெரிய விக்கெட். தற்போது மகிழ்ச்சியாக உள்ளேன்,'' என்றார்.

