தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/சூர்யகுமார் 'நம்பர்-2': ஐ.சி.சி., 'டி-20' தரவரிசையில்

சூர்யகுமார் 'நம்பர்-2': ஐ.சி.சி., 'டி-20' தரவரிசையில்

சூர்யகுமார் 'நம்பர்-2': ஐ.சி.சி., 'டி-20' தரவரிசையில்


ADDED : ஜூலை 10, 2024 10:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2024 10:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் 2வது இடத்தில் நீடிக்கிறார்.

சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்டது.

பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ், 821 புள்ளிகளுடன் 'நம்பர்-2' இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (844 புள்ளி) முதலிடத்தில் தொடர்கிறார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது 'டி-20'யில் 47 பந்தில் 77 ரன் விளாசிய மற்றொரு இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் (662), 20வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு முன்னேறினார்.

பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் அக்சர் படேல் (644), குல்தீப் யாதவ் (641) முறையே 9, 11வது இடத்துக்கு தள்ளப்பட்டனர். ஜிம்பாப்வேக்கு எதிரான முதலிரண்டு 'டி-20'யில் 6 விக்கெட் கைப்பற்றிய இந்தியாவின் ரவி பிஷ்னோய் (627), 22வது இடத்தில் இருந்து 14வது இடத்துக்கு முன்னேறினார். இங்கிலாந்தின் அடில் ரஷித் (718) 'நம்பர்-1' இடத்தில் உள்ளார்.

'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்திய துணை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (213) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இலங்கையின் ஹசரங்கா (222) முதலிடத்துக்கு முன்னேறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us