தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/சூர்யகுமார் 'நம்பர்-7': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்

சூர்யகுமார் 'நம்பர்-7': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்

சூர்யகுமார் 'நம்பர்-7': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்


ADDED : ஜன 28, 2026 09:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 09:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் 7வது இடத்துக்கு முன்னேறினார்.

சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் வரிசையில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், 717 புள்ளிகளுடன் 12வது இடத்தில் இருந்து 'நம்பர்-7' இடத்தை கைப்பற்றினார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று 'டி-20' போட்டியில் 171 ரன் (32, 82*, 57*) குவித்துள்ளார் சூர்யகுமார்.

நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு அரைசதம் (84, 68*) விளாசிய இந்தியாவின் அபிஷேக் சர்மா (929 புள்ளி) 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீரர் திலக் வர்மா (781) 3வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

பவுலர் தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, 787 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான 3வது 'டி-20' போட்டியில் 3 விக்கெட் சாய்த்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (640), 17வது இடத்தில் இருந்து 13வது இடத்துக்கு முன்னேறினார்.

'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (248 புள்ளி), 4வது இடத்தில் இருந்து 'நம்பர்-3' இடத்தை கைப்பற்றினார். முதலிடத்தில் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஜா (289) உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us