sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

சிட்னி டெஸ்ட்: இந்திய அணி தோல்வி: கோப்பை வென்றது ஆஸ்திரேலியா

/

சிட்னி டெஸ்ட்: இந்திய அணி தோல்வி: கோப்பை வென்றது ஆஸ்திரேலியா

சிட்னி டெஸ்ட்: இந்திய அணி தோல்வி: கோப்பை வென்றது ஆஸ்திரேலியா

சிட்னி டெஸ்ட்: இந்திய அணி தோல்வி: கோப்பை வென்றது ஆஸ்திரேலியா


UPDATED : ஜன 05, 2025 11:24 PM

ADDED : ஜன 05, 2025 11:22 PM

Google News

UPDATED : ஜன 05, 2025 11:24 PM ADDED : ஜன 05, 2025 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிட்னி: சிட்னி டெஸ்டில் சொதப்பிய இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.தொடரை 1-3 என இழந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற தவறியது. நேற்று பும்ரா பந்துவீசாதது, வினையாக அமைந்தது. சொந்த மண்ணில் அசத்திய ஆஸ்திரேலிய அணி, 10 ஆண்டுக்கு பின் 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பையை கைப்பற்றியது. உலக டெஸ்ட் பைனலுக்கும் முன்னேறியது.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்--கவாஸ்கர்' டிராபிக்கான டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. ஐந்தாவது டெஸ்ட் சிட்னியில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 185, ஆஸ்திரேலியா 181 ரன் எடுத்தன. இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 141/6 ரன் எடுத்து, 145 ரன் முன்னிலை பெற்றிருந்தது.

போலண்ட் 6 விக்.,மூன்றாவது நாள் ஆட்டத்தில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ரவிந்திர ஜடேஜா (13), வாஷிங்டன் சுந்தர் (12) நடையைகட்டினர். சிராஜை (4) வெளியேற்றிய போலண்ட், தனது 5வது விக்கெட்டை பெற்றார். இதே ஓவரில் பும்ராவையும் (0), போல்டாக்கிய போலண்ட், 6 விக்கெட் சாய்த்தார். 'வால்' ஆடாததால், கடைசி நான்கு விக்கெட் 16 ரன்னுக்கு சரிந்தன. ரிஷாப் (61), ஜெய்ஸ்வால் (22), உதிரி (8) போக, மற்ற 9 பேர் சேர்ந்து 66 ரன் தான் எடுத்தனர். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

கிருஷ்ணா ஆறுதல்சுலப இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு, பும்ரா (முதுகு பிடிப்பு) பந்துவீசாதது சாதகமாக அமைந்தது. இந்திய அணியை கோலி வழிநடத்தினார். பும்ராவுக்கு பதில் மாற்று வீரர் அபிமன்யு ஈஸ்வரன், 'பீல்டிங்' செய்தார். கான்ஸ்டாஸ், கவாஜா அதிரடியாக ரன் சேர்த்தனர். சிராஜ், பிரசித் கிருஷ்ணா தடுமாற, முதல் மூன்று ஓவரில் 35 ரன் எடுக்கப்பட்டன. பிரசித் கிருஷ்ணா 'வேகத்தில்' கான்ஸ்டாஸ் (22), லபுசேன் (6), ஸ்டீவ் ஸ்மித் (4) வெளியேற, ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 58 ரன் எடுத்து தவித்தது. கவாஜா, 41 ரன் எடுத்தார்.

இந்திய அணிக்கு மீண்டும் 'தலைவலி' கொடுத்த டிராவிஸ் ஹெட், அறிமுக வெப்ஸ்டர் அசத்தினர். வாஷிங்டன் சுந்தர் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய வெப்ஸ்டர், வெற்றியை உறுதி செய்து, ஆர்ப்பரித்தார். ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 162 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஹெட் (34), வெப்ஸ்டர் (39) அவுட்டாகாமல் இருந்தனர்.இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட் வீழ்த்தினார்.

10 ஆண்டுக்குப் பின்...

'பார்டர்-கவாஸ்கர்' டிராபியை ஆஸ்திரேலிய அணி 10 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றியது. கடைசியாக 2014-15ல் நடந்த 4 போட்டிகள் கொண்ட இத்தொடரை 2-0 என வென்றது. அதன்பின் இந்திய அணி வரிசையாக 4 முறை (2016-17, 2018-19, 2020-21, 2022-23) சாம்பியன் ஆனது.

ஜெய்ஸ்வால் '391'

இம்முறை அதிக ரன் எடுத்த வீரர் வரிசையில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் முதலிடம் பிடித்தார். இவர், 5 டெஸ்டில், 2 சதம் உட்பட 448 ரன் குவித்தார். இந்தியாவின் ஜெய்ஸ்வால் (391 ரன், 5 டெஸ்ட், ஒரு சதம்) 2வது இடத்தை கைப்பற்றினார்.

பும்ரா முதல்வன்

அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் பட்டியலில் இந்தியாவின் பும்ரா முதலிடத்தை கைப்பற்றினார். இவர், 5 டெஸ்டில், 32 விக்கெட் சாய்த்தார். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் (25 விக்கெட், 5 டெஸ்ட்) உள்ளார்.

மீண்டும் 'உலக' பைனலில்

சிட்னி டெஸ்டில் வென்ற ஆஸ்திரேலிய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தொடர்ந்து 2வது முறையாக (2021-23, 2023-25) முன்னேறியது. வரும் ஜூன் 11-15ல் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் பைனலில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இம்முறை புள்ளிப்பட்டியலில் 3வது இடம் பிடித்த இந்தியாவின் 'ஹாட்ரிக்' உலக பைனல் கனவு தகர்ந்தது.

கபில்தேவ் சாதனை சமன்

பும்ரா, 5 போட்டியில், 32 விக்கெட் கைப்பற்றினார். ஒரு டெஸ்ட் தொடரில், அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை 'வேகப்புயல்' கபில்தேவுடன் பகிர்ந்து கொண்டார். கடந்த 1979-80ல் இந்தியாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கபில்தேவ் 32 விக்கெட் சாய்த்திருந்தார்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தை ஹர்பஜனுடன் பகிர்ந்து கொண்டார் பும்ரா. கடந்த 2001ல் இந்தியாவில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஹர்பஜன் 32 விக்கெட் கைப்பற்றினார்.

சிராஜ் '100'

ஆஸ்திரேலியாவின் கவாஜாவை அவுட்டாக்கிய முகமது சிராஜ், டெஸ்ட் அரங்கில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்தார். இதுவரை 36 டெஸ்டில், 100 விக்கெட் வீழ்த்தி உள்ளார். தவிர உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அரங்கில் 100 விக்கெட் கைப்பற்றிய 4வது இந்திய பவுலரானார். ஏற்கனவே இந்தியாவின் அஷ்வின் (195 விக்கெட்), பும்ரா (156), ஜடேஜா (131) இம்மைல்கல்லை எட்டினர்.

'ரீவைண்ட்'

'பார்டர்-கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-1 எனக் கைப்பற்றியது.

முதல் டெஸ்ட், பெர்த்: இந்தியா வெற்றி (295 ரன்), ஆட்ட நாயகன்: பும்ரா (இந்தியா, 8 விக்.,)

2வது டெஸ்ட், அடிலெய்டு: ஆஸி., வெற்றி (10 விக்.,), ஆட்ட நாயகன்: ஹெட் (ஆஸி., 140 ரன்)

3வது டெஸ்ட், பிரிஸ்பேன்: மழையால் 'டிரா', ஆட்ட நாயகன்: ஹெட் (ஆஸி., 152 ரன், ஒரு விக்.,)

4வது டெஸ்ட், மெல்போர்ன்: ஆஸி., வெற்றி (184 ரன்), ஆட்ட நாயகன்: கம்மின்ஸ் (ஆஸி., 6 விக்., 90 ரன்)

5வது டெஸ்ட், சிட்னி: ஆஸி., வெற்றி (6 விக்.,), ஆட்ட நாயகன்: போலண்ட் (ஆஸி., 10 விக்.,)

தொடர் முடிவு: ஆஸி., 3, இந்தியா 1

தொடர் நாயகன்: பும்ரா (இந்தியா, 32 விக்.,)






      Dinamalar
      Follow us