sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

'டி-20' உலக கோப்பை உலா

/

'டி-20' உலக கோப்பை உலா

'டி-20' உலக கோப்பை உலா

'டி-20' உலக கோப்பை உலா


ADDED : ஜன 31, 2026 11:24 PM

Google News

ADDED : ஜன 31, 2026 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியா, இலங்கையில், ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 10வது சீசன், வரும் பிப். 7ல் துவங்குகிறது. 'நடப்பு சாம்பியன்' இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்கின்றன. பைனல், மார்ச் 8ல் நடக்கவுள்ளது.

திலக் வர்மா 'ரெடி'

இந்திய வீரர் திலக் வர்மா 23, இடுப்பு பகுதி காயத்தில் இருந்து மீண்டார். பெங்களூருவில் உள்ள பி.சி.சி.ஐ., சிறப்பு மையத்தில் உடற்தகுதியை நிரூபித்தார். உலக கோப்பை தொடரில் அசத்த உள்ளார். வரும் பிப். 3ல் மும்பையில், இந்திய அணியினரோடு இணைய உள்ளார்.

கம்மின்ஸ் விலகல்

'டி-20' உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முதுகுப்பகுதி காயத்தில் இருந்து குணமடையாத அனுபவ வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் 32, விலகினார். இவருக்கு பதிலாக, வேகப்பந்துவீச்சாளர் பென் டிவார்ஷுயிஸ் 31, சேர்க்கப்பட்டுள்ளார். உத்தேச அணியில் இடம் பெற்றிருந்த மாத்யூ ஷார்ட் நீக்கப்பட்டு மாத்யூ ரென்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அணி விபரம்: மிட்சல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லட், டிம் டேவிட், பென் டிவார்ஷுயிஸ், கேமிரான் கிரீன், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், கூப்பர் கொனோலி, மாத்யூ குனேமன், மேக்ஸ்வெல், மாத்யூ ரென்ஷா, மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஜாம்பா.

வருகிறார் மில்லர்

தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட தென் ஆப்ரிக்காவின் டேவிட் மில்லர் 36, தனது உடற்தகுதியை நிரூபித்தார். இதனையடுத்து 'டி-20' உலக கோப்பையில் பங்கேற்க இவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று, ஜோகனஸ்பர்க்கில் இருந்து மும்பைக்கு புறப்படும் தென் ஆப்ரிக்க அணியில் இணைய உள்ளார்.






      Dinamalar
      Follow us