/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியா வெற்றி தொடருமா * இன்று ஆப்கானிஸ்தானுடன் பலப்பரீட்சை
/
இந்தியா வெற்றி தொடருமா * இன்று ஆப்கானிஸ்தானுடன் பலப்பரீட்சை
இந்தியா வெற்றி தொடருமா * இன்று ஆப்கானிஸ்தானுடன் பலப்பரீட்சை
இந்தியா வெற்றி தொடருமா * இன்று ஆப்கானிஸ்தானுடன் பலப்பரீட்சை
ADDED : ஜூன் 19, 2024 10:43 PM

பார்படாஸ்: 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' சுற்றில் இன்று இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை தொடரின் 'சூப்பர்-8' போட்டி நடக்கின்றன. இந்திய அணி 'பிரிவு 1' ல் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசத்துடன் இடம் பிடித்துள்ளது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும். முடிவில், புள்ளிப்பட்டியலில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இன்று பார்படாசில் நடக்கும் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
மாறுமா துவக்கம்
துவக்கத்தில் கேப்டன் ரோகித் (52, 13, 3), கோலி (1, 4, 0) ஜோடி தொடரலாம். இம்முறை ஆடுகளம் பேட்டிங்கிற்கு கைகொடுக்கும் என்பதால் கோலி மீண்டு வர முயற்சிக்கலாம். தவிர ரிஷாப் பன்ட் (36, 42, 18), சூர்யகுமார் (2, 7, 50) அணிக்கு கைகொடுக்க உள்ளனர்.
தேர்வு எப்படி
இந்திய அணி லீக் சுற்றில் ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜடேஜா என நான்கு ஆல் ரவுண்டர்களுடன் விளையாடியது. இதனால் 8 வது இடம் வரை பேட்டிங் வரிசை நீண்டது. இது மீண்டும் தொடர கேப்டன் ரோகித் விரும்பலாம்.
இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் சுழலுக்கு சற்று உதவும் என்பதால் குல்தீப் அணியில் சேர்க்கப்பட்டு, வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் நீக்கப்படலாம். தவிர சீரான வேகத்தில் காற்று வீசுவதால், துவக்கத்தில் பும்ரா (5 விக்.,), அர்ஷ்தீப் சிங் (7) பந்துகளை நன்றாக 'ஸ்விங்' செய்ய முயற்சிக்கலாம்.
பவுலிங் பலமா
ஆப்கானிஸ்தான் அணி லீக் சுற்றில் 4ல் 3ல் வென்றது. முதல் 3 போட்டியில் பவுலிங்கில் மிரட்டிய இந்த அணி, கடைசியாக வெஸ்ட் இண்டீசின் ரன்களை வாரி வழங்கியது. இம்முறை கேப்டன் ரஷித் கான் தலைமையில், மீண்டு வர முயற்சிக்கலாம். வேகத்தில், இதுவரை 12 விக்கெட் சாய்த்த பரூக்கியை பெரிதும் அணி நம்பியுள்ளது. பேட்டிங்கில் ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரன் கைகொடுக்க உள்ளனர்.
மழை வருமா
பார்படாசில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். போட்டி நேரத்தில் மழை வர அதிகபட்சம் 13 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளது.
நேரம் எப்போது
இந்திய நேரப்படி இரவு 8:00 மணி என்றாலும், வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி போட்டி காலை 10:30 மணிக்கு துவங்கும்.