/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தமிழக அணி ரன் குவிப்பு: வாஷிங்டன், ரஞ்சன் பால் சதம்
/
தமிழக அணி ரன் குவிப்பு: வாஷிங்டன், ரஞ்சன் பால் சதம்
தமிழக அணி ரன் குவிப்பு: வாஷிங்டன், ரஞ்சன் பால் சதம்
தமிழக அணி ரன் குவிப்பு: வாஷிங்டன், ரஞ்சன் பால் சதம்
ADDED : அக் 19, 2024 09:53 PM

புதுடில்லி: வாஷிங்டன் சுந்தர், பிரதோஷ் ரஞ்சன் பால் சதம் கடந்து கைகொடுக்க தமிழக அணி முதல் இன்னிங்சில் 674 ரன் குவித்தது.
டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் ரஞ்சி கோப்பை 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், டில்லி அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 379/1 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் பொறுப்பாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் சதம் கடந்தார். சைனி 'வேகத்தில்' சாய் சுதர்சன் (213) அவுட்டானார். பாபா இந்திரஜித் (16), ஷாருக்கான் (23) நிலைக்கவில்லை. வாஷிங்டன் சுந்தர் 152 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரதோஷ் ரஞ்சன் பால் (117), தன்பங்கிற்கு சதம் விளாசினார். ஆன்ட்ரி சித்தார்த் அரைசதம் கடந்தார்.
தமிழக அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 674 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. சித்தார்த் (66) அவுட்டாகாமல் இருந்தார்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய டில்லி அணி, ஆட்டநேர முடிவில் 43/0 ரன் எடுத்திருந்தது. சனத் சங்வான் (23), ஹர்ஷ் தியாகி (15) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஸ்ரேயாஸ் சதம்
மும்பையில் நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் மகாராஷ்டிரா, மும்பை அணிகள் விளையாடுகின்றன. மகாராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 126 ரன் எடுத்தது. ஆயுஷ் மத்ரே (176), ஸ்ரேயாஸ் ஐயர் (142) கைகொடுக்க மும்பை அணி முதல் இன்னிங்சில் 441 ரன் குவித்தது.
ஆட்டநேர முடிவில் மகாராஷ்டிரா அணி 2வது இன்னிங்சில் 142/1 ரன் எடுத்திருந்தது. சச்சித் தாஸ் (59), கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (80) அவுட்டாகாமல் இருந்தனர்.