/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தமிழக அணி ரன் குவிப்பு: ஷாருக்கான், ஜெகதீசன் அரைசதம்
/
தமிழக அணி ரன் குவிப்பு: ஷாருக்கான், ஜெகதீசன் அரைசதம்
தமிழக அணி ரன் குவிப்பு: ஷாருக்கான், ஜெகதீசன் அரைசதம்
தமிழக அணி ரன் குவிப்பு: ஷாருக்கான், ஜெகதீசன் அரைசதம்
ADDED : நவ 14, 2024 10:32 PM

ஆமதாபாத்: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழகத்தின் ஷாருக்கான், கேப்டன் ஜெகதீசன், சித்தார்த் அரைசதம் கடந்தனர்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ரயில்வேஸ் அணிகள் விளையாடுகின்றன. ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்சில் 229 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 19/0 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் தமிழக அணியின் ஷாருக்கான், கேப்டன் நாராயண் ஜெகதீசன் அரைசதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 137 ரன் சேர்த்த போது ஷாருக்கான் (86) அவுட்டானார். விஜய் சங்கர் (11) நிலைக்கவில்லை. ஜெகதீசன் (56) நம்பிக்கை தந்தார். பிரதோஷ் ரஞ்சன் பால் (38) ஓரளவு கைகொடுத்தார். ஆன்ட்ரி சித்தார்த் (78), அரைசதம் விளாசினார்.
ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 324 ரன் எடுத்திருந்தது. முகமது அலி (37), அஜித் ராம் (6) அவுட்டாகாமல் இருந்தனர். ரயில்வேஸ் சார்பில் குணால் யாதவ், ஷிவம் சவுத்தரி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.