/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தமிழக அணி வெற்றி: 'கூச் பெஹார்' டிராபியில்
/
தமிழக அணி வெற்றி: 'கூச் பெஹார்' டிராபியில்
ADDED : நவ 26, 2025 10:56 PM

தேனி: தேனியில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்த 'கூச் பெஹார்' டிராபி தொடருக்கான லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் தமிழகம், பீஹார் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் பீஹார் 203, தமிழகம் 383/8 ('டிக்ளேர்') ரன் எடுத்தன.
பின், 180 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய பீஹார் அணிக்கு, தமிழக பவுலர்கள் தொல்லை தந்தனர். பிரியான்ஷு (52) மட்டும் அரைசதம் கடந்தார். பீஹார் அணி 2வது இன்னிங்சில் 121 ரன்னுக்கு சுருண்டது. தமிழக அணி இன்னிங்ஸ், 59 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழகம் சார்பில் பென்னி ஹின், சந்தீப் தலா 4, பவிஷ் 2 விக்கெட் கைப்பற்றினர். இன்னிங்ஸ் வெற்றி பெற்ற தமிழக அணிக்கு ஒரு 'போனஸ்' உட்பட 7 புள்ளி வழங்கப்பட்டது.

