தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஆஸ்திரேலிய அணி அபாரம்

ஆஸ்திரேலிய அணி அபாரம்

ஆஸ்திரேலிய அணி அபாரம்


ADDED : ஜூலை 14, 2025 11:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2025 11:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி, கிங்ஸ்டனில் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 225 ரன் எடுத்தது.

பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜான் கேம்பல் (36), ஷாய் ஹோப் (23) ஆறுதல் தந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 143 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் ஸ்காட் போலந்து 3, ஹேசல்வுட், கேப்டன் கம்மின்ஸ் தலா 2 விக்கெட் சாய்த்தனர். பின் 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி, 2ம் நாள் முடிவில் 99/6 ரன் எடுத்திருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us