UPDATED : அக் 19, 2026 12:00 AM
ADDED : அக் 18, 2026 07:36 PM

கெபெர்ஹா: தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. கெபெர்ஹாவில் 2வது டெஸ்ட் நடக்கிறது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ், 'பீல்டிங்' தேர்வு செய்தார். மழையால் முதல் நாள் ஆட்டம் தாமதமாக துவங்கியது.
தென் ஆப்ரிக்க அணி 11/0 ரன் (5.3 ஓவர்) எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. மழை நின்ற பின் மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது. ஸ்காட் போலண்ட் 'வேகத்தில்' மார்க்ரம் (11), பெடிங்ஹாம் (0), அடுத்தடுத்து அவுட்டாகினர். தென் ஆப்ரிக்க அணி 12/2 ரன் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட, முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. மார்க்கஸ் ஆக்கர்மேன் (5), கேப்டன் பவுமா (4) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் போலண்ட் 2 விக்கெட் கைப்பற்றினார்.
