தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/உயரே...உயரே பறக்கும் தருணம்: ரோகித் சொல்லும் உதாரணம்

உயரே...உயரே பறக்கும் தருணம்: ரோகித் சொல்லும் உதாரணம்

உயரே...உயரே பறக்கும் தருணம்: ரோகித் சொல்லும் உதாரணம்


ADDED : டிச 22, 2025 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2025 11:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ''விமானத்தை விரைவாக தரையிறக்க விரும்பவில்லை. தொடர்ந்து உயரே பறக்க விரும்புகிறேன்,'' என ஓய்வு குறித்து ரோகித் சர்மா சூசகமாக தெரிவித்தார்.

இந்திய அணியின் 'சீனியர்' பேட்டர் ரோகித் சர்மா, 38. இவரது தலைமையில் 2023ல் நடந்த உலகக் கோப்பை தொடரில் (50 ஓவர்) இந்திய அணி, தொடர்ந்து 10 வெற்றிகளுடன் பைனலுக்கு முன்னேறியது. ஆமதாபாத்தில் நடந்த பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று, கோப்பையை கோட்டைவிட்டது. இதிலிருந்து மீண்ட இவர், 2024ல் 'டி-20' உலக கோப்பை, 2025ல் சாம்பியன்ஸ் டிராபி வென்று தந்தார்.

'நம்பர்-1' வீரர்: டெஸ்ட், 'டி-20' அரங்கில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித், ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். இவரிடம் இருந்து கேப்டன் பதவியை பறித்த போதும், 2025ல் 14 ஒருநாள் போட்டியில் 650 ரன் குவித்து, உலகின் 'நம்பர்-1' பேட்டராக ஜொலிக்கிறார். அடுத்து உள்ளூர் விஜய் ஹசாரே தொடர், நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். 2027ல் நடக்கும் உலகக் கோப்பை (50 ஓவர்) தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளார். தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்பதை, விமானம் பறக்கும் உயரத்தை உதாரணமாக குறிப்பிட்டு பேசினார். குருகிராமில் நடந்த கல்லுாரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் ரோகித் பேசியது:

விமானம் 'டேக் ஆப்' சமயத்தில் சற்று சிரமம் இருக்கும். 35,000-40,000 அடி உயரத்தில் பறக்கும் போது, நிதானமான சூழல் நிலவும். பயணிகள் 'ரிலாக்சாக' இருப்பர். சிலர் சாப்பிடுவர். சிலர் துாங்குவர். இது போல எனது கிரிக்கெட் வாழ்க்கையும் ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. இப்போது உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. விமானத்தை தரையிறக்குவதும் முக்கியம். எப்போது தரையிறங்குவது என்பது ஒவ்வொருவரின் முடிவை பொறுத்தது. இப்போதைக்கு விமானத்தை தரையிறக்க நான் விரும்பவில்லை. தொடர்ந்து உச்சத்தில் பறக்க விரும்புகிறேன்.

ஓய்வு முடிவு: கடந்த 2022ல் கேப்டன் பதவியை ஏற்ற போது, உலக கோப்பை வெல்வதே இலக்காக இருந்தது. 2023ல் உலகக் கோப்பை பைனல் தோல்விக்கு பின் மனமுடைந்து போனேன். இத்தொடர் என்னிடம் இருந்து அனைத்து சக்தியையும் எடுத்துக் கொண்டது. என்னிடம் எதுவும் மீதமில்லை என உணர்ந்தேன். ஒருகட்டத்தில் கிரிக்கெட்டே வேண்டாம்; ஓய்வு பெற்றுவிடலாம் என தோன்றியது. இந்த சோகத்தில் இருந்து மீள, 2 மாதங்கள் தேவைப்பட்டன. நான் நேசிக்கும் விளையாட்டுக்கு திரும்ப வேண்டும் என அடிக்கடி சொன்னேன். வாழ்க்கை இத்துடன் முடிந்துவிடவில்லை என நினைத்தேன். இந்த தோல்வி பாடமாக அமைந்தது. 'டி-20' உலகக்கோப்பை (2024) தொடரில் முழு கவனம் செலுத்தி சாதித்தேன்.

இவ்வாறு ரோகித் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us