sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

கோல்கட்டா அணிக்கு மூன்றாவது கோப்பை: ஐ.பி.எல்., பைனலில் அசத்தல்

/

கோல்கட்டா அணிக்கு மூன்றாவது கோப்பை: ஐ.பி.எல்., பைனலில் அசத்தல்

கோல்கட்டா அணிக்கு மூன்றாவது கோப்பை: ஐ.பி.எல்., பைனலில் அசத்தல்

கோல்கட்டா அணிக்கு மூன்றாவது கோப்பை: ஐ.பி.எல்., பைனலில் அசத்தல்


ADDED : மே 27, 2024 12:43 AM

Google News

ADDED : மே 27, 2024 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஐ.பி.எல்., கோப்பையை கோல்கட்டா அணி சுலபமாக வென்றது. பைனிலில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் அணி இரண்டாம் இடம் பெற்று ஆறுதல் அடைந்தது.

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த 17வது ஐ.பி.எல்., தொடரின் பைனலில் கோல்கட்டா, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

ஸ்டார்க் மிரட்டல்

ஐதராபாத் அணி ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்டது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க, கோல்கட்டா 'வேகங்கள்' போட்டுத் தாக்கினர். ரூ.24.75 கோடிக்கு வாங்கப்பட்ட 'காஸ்ட்லி' ஸ்டார்க் சரியான நேரத்தில் திறமை நிரூபித்தார். முதல் ஓவரில், இவரது 'சூப்பர்' பந்தில் அபிஷேக் வர்மா (2) போல்டானார். வைபவ் அரோரா வீசிய அடுத்த ஓவரில் டிராவிஸ் ஹெட் (0) 'கோல்டன் டக்' அவுட்டானார். இரு அதிரடி வீரர்கள் விரைவில் நடையை கட்ட, 2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 6 ரன் எடுத்து தவித்தது. தொடர்ந்து 'வேகத்தில்' மிரட்டிய ஸ்டார்க் பந்தில் திரிபாதி (9) வெளியேறினார். 6 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 40 ரன் எடுத்தது.

7 விக்., 77 ரன்

இதற்கு பின் ரன் ரேட்டை உயர்த்தும் முயற்சியில் ஐதராபாத் வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். நிதிஷ் (13) நிலைக்கவில்லை. ரசலிடம் மார்க்ரம் (20) வீழ்ந்தார். 12.4 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 77 ரன் எடுத்து தத்தளித்தது. அணியை கரை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிளாசன் (16), ஹர்ஷித் ராணா 'வேகத்தில்' பெவிலியன் திரும்ப, ஸ்கோர் உயர வாய்ப்பு இல்லாமல் போனது. ரசல் பந்தில் கம்மின்ஸ் (24) வெளியேறினார்.

ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

வெங்கடேஷ் விளாசல்

சுலப இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு நரைன் (6) ஏமாற்றினார். பின் வெங்கடேஷ் வெளுத்து வாங்கினார். புவனேஷ்வர் ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் விளாசினார். தொடர்ந்து நடராஜன் ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். குர்பாஸ் 39 ரன் எடுத்தார். அரைசதம் கடந்த வெங்கடேஷ், ஷாபாஸ் பந்தில் ஒரு ரன் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். கோல்கட்டா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 114 ரன் எடுத்து 'மின்னல்' வேக வெற்றி பெற்றது. வெங்கடேஷ் (52), கேப்டன் ஸ்ரேயாஸ்(6) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை கோல்கட்டாவின் ஸ்டார்க் வென்றார். தொடர் நாயகன் விருதை கோல்கட்டாவின் சுனில் நரைன் (488 ரன், 17 விக்கெட்) தட்டிச் சென்றார்.

மூன்றாவது முறை

கோல்கட்டா அணி மூன்றாவது முறையாக (2012, 2014, 2024) ஐ.பி.எல்., கோப்பை வென்றது. சென்னை, மும்பை அணிகள் அதிகபட்சமாக தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.



ரூ. 20 கோடி பரிசு

பைனலில் வெற்றி பெற்ற கோல்கட்டா அணிக்கு சாம்பியன் கோப்பையுடன், ரூ. 20 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த ஐதராபாத் அணிக்கு ரூ. 12.5 கோடி கிடைத்தது.

கோலி '741'

அதிக ரன் எடுத்த வீரர்கள் வரிசையில் பெங்களூருவின் கோலி (741 ரன்) முதலிடம் பிடித்தார். இவருக்கு 'ஆரஞ்சு' நிற தொப்பி வழங்கப்பட்டது.

ஹர்ஷல் '24'

அதிக விக்கெட் சாய்த்த பவுலர் பட்டியலில் பஞ்சாப்பின் ஹர்ஷல் படேல் (24 விக்கெட்) முதலிடத்தை கைப்பற்றினார். இவருக்கு 'பர்பிள்' நிற தொப்பி வழங்கப்பட்டது.

காம்பிருக்கு பெருமை

கோல்கட்டாவின் கவுதம் காம்பிர், ஐ.பி.எல்., அரங்கில் கேப்டனாகவும் (2012, 2014), ஆலோசகராகவும் (2024) கோப்பை வென்று சாதனை படைத்தார்.

1260 சிக்சர்

இம்முறை 1260 சிக்சர் பறந்தன. ஐதராபாத்தின் அபிஷேக் சர்மா அதிகபட்சமாக 42 சிக்சர் விளாசினார். கிளாசன் (ஐதராபாத்), கோலி (பெங்களூரு) தலா 38 சிக்சர் அடித்தனர்.

2174 பவுண்டரி

மொத்தம் 2174 பவுண்டரி விளாசப்பட்டது. ஐதராபாத்தின் டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 64 பவுண்டரி விரட்டினார். கோலி 62 பவுண்டரி அடித்தார்.

14 சதம்

இம்முறை 14 சதம் பதிவாகின. ராஜஸ்தானின் பட்லர் 2 சதம் அடித்தார். ஜாக்ஸ், பேர்ஸ்டோவ், சூர்யகுமார், சாய் சுதர்சன், சுப்மன் கில், ருதுராஜ், சுனில் நரைன், ரோகித் சர்மா, ஸ்டாய்னிஸ், ஹெட், ஜெய்ஸ்வால், கோலி தலா ஒரு சதம் விளாசினர்.

128 அரைசதம்

மொத்தம் 128 அரைசதம் பதிவாகின. கோலி, ரஜத் படிதர் (பெங்களூரு), சாம்சன் (ராஜஸ்தான்) தலா 5 அரைசதம் விளாசினர்.

113 ரன்

ஐ.பி.எல்., பைனலில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணியானது ஐதராபாத் (113/10, எதிர்: கோல்கட்டா, 2024). இதற்கு முன் சென்னை அணி 125/9 ரன் (எதிர்: மும்பை, 2013) எடுத்து இருந்தது.






      Dinamalar
      Follow us