/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
டி.என்.பி.எல்., கிரிக்கெட்: திண்டுக்கல்-கோவை மோதல்
/
டி.என்.பி.எல்., கிரிக்கெட்: திண்டுக்கல்-கோவை மோதல்
டி.என்.பி.எல்., கிரிக்கெட்: திண்டுக்கல்-கோவை மோதல்
டி.என்.பி.எல்., கிரிக்கெட்: திண்டுக்கல்-கோவை மோதல்
ADDED : ஜூன் 04, 2025 10:26 PM

கோவை: டி.என்.பி.எல்., தொடர் இன்று துவங்குகிறது. இதில் திண்டுக்கல் அணி மீண்டும் கோப்பை வென்று சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில் டி.என்.பி.எல்., தொடர் நடத்தப்படுகிறது. இதன் 9வது சீசன் இன்று கோவையில் துவங்குகிறது. இதில் 'நடப்பு சாம்பியன்' திண்டுக்கல், சென்னை, கோவை, நெல்லை, மதுரை, சேலம், திருப்பூர், திருச்சி என 8 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான போட்டிகள் கோவை (ஜூன் 5-11), சேலம் (ஜூன் 13-19), நெல்லை (ஜூன் 21-26), திண்டுக்கல் (ஜூன் 28-ஜூலை 6) என 4 இடங்களில் நடக்கின்றன.
ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் சுற்றில் (ஜூன் 5-29) மோதும். முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். மொத்தம் 32 போட்டிகள் (28 லீக், 3 'பிளே-ஆப்', பைனல்) நடக்கவுள்ளன. ஜூலை 1ல் தகுதிச் சுற்று-1, ஜூலை 2ல் 'எலிமினேட்டர்', ஜூலை 4ல் தகுதிச் சுற்று-2 நடக்கவுள்ளன. பைனல், ஜூலை 6ல் நடத்தப்படுகிறது. இந்த நான்கு போட்டிகளும் திண்டுக்கலில் நடக்கும்.
கோவையில் இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில் திண்டுக்கல், கோவை அணிகள் மோதுகின்றன. இம்முறை திண்டுக்கல் அணி சாதித்தால், தொடர்ச்சியாக 2வது கோப்பை வெல்லலாம். முன்னாள் சாம்பியன்களான சேப்பாக்கம், கோவை, மதுரை அணிகளும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முயற்சிக்கலாம்.