/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
டி.என்.பி.எல்., வீரர்கள் ஏலம் * யாருக்கு மவுசு அதிகம்
/
டி.என்.பி.எல்., வீரர்கள் ஏலம் * யாருக்கு மவுசு அதிகம்
டி.என்.பி.எல்., வீரர்கள் ஏலம் * யாருக்கு மவுசு அதிகம்
டி.என்.பி.எல்., வீரர்கள் ஏலம் * யாருக்கு மவுசு அதிகம்
ADDED : பிப் 15, 2025 11:13 PM

சென்னை: தமிழக பிரிமியர் லீக் 'டி-20' தொடரின் (டி.என்.பி.எல்.,) 9 வது சீசன் விரைவில் நடக்கவுள்ளது. திண்டுக்கல் அணியில் அஷ்வின் (ரூ. 16 லட்சம்), வருண் சக்ரவர்த்தி (ரூ. 12 லட்சம்), கோவை அணியில் ஷாருக்கான் (16 லட்சம்), சாய் சுதர்சன் (ரூ. 12 லட்சம்), திருப்பூர் அணியில் தமிழக அணி கேப்டன் சாய் கிஷோர் (ரூ. 16 லட்சம்), நடராஜன் (ரூ. 12 லட்சம்) உட்பட 39 பேர் தக்கவைக்கப்பட்டனர்.
ஒவ்வொரு அணியிலும் 16 முதல் 20 பேர் இருக்க வேண்டும் என்பதால், மீதமுள்ள இடங்களுக்கான வீரர்களை தேர்வு செய்ய, சென்னையில் நேற்று ஏலம் நடந்தது. மொத்தம் 691 பேர் ஏலத்தில் இடம் பெற்றிருந்தனர்.
முதல் ஏலத்தில் 'ஆல் ரவுண்டர்' விஜய் சங்கரை, ரூ. 18 லட்சத்துக்கு சேப்பாக்கம் அணி வாங்கியது. வேகப்பந்து வீச்சாளர் முகமதுவுக்கு, அடிப்படை விலை ரூ. 2 லட்சமாக இருந்தது. முடிவில் ரூ. 18.40 லட்சம் கொடுத்து சேலம் அணி வாங்கியது.
விக்கெட் கீப்பர் சுரேஷ் குமார் ரூ. 16.10 லட்சத்துக்கு திருச்சி அணி வாங்கியது. மற்றொரு விக்கெட் கீப்பர் ஹன்னியை (ரூ. 11.70 லட்சம்) திண்டுக்கல் அணி தட்டிச் சென்றது. எமிரேட்ஸ் அணிக்காக விளையாடி, 2022 'டி-20' உலக கோப்பை தொடரில் 'ஹாட்ரிக்' விக்கெட் சாய்த்தவர் சுழல் வீரர் கார்த்திக் மெய்யப்பன். தற்போது மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ள இவர், ரூ. 9.2 லட்சத்துக்கு மதுரை அணிக்கு சென்றார். ஏலத்தின் முடிவில், திண்டுக்கல், திருச்சி அணிகள் தவிர மற்ற அணிகளில் தலா 20 பேர் இடம் பெற்றுள்ளனர்.
திருச்சி அணியில் வாஷிங்டன்
இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர். ஓய்வு பெற்ற அஷ்வினுக்கு அடுத்து முன்னணி பவுலராக உள்ளார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்க சென்றால், டி.என்.பி.எல்., தொடரில் முழுமையாக பங்கேற்க முடியாது. இதனால் ரூ. 6 லட்சம் மட்டும் கொடுத்து திருச்சி அணி வாங்கியது.
'டாப்-8'
டி.என்.பி.எல்., ஏலத்தில் ரூ. 10 லட்சத்துக்கும் மேல் வாங்கப்பட்ட டாப்-8 வீரர்கள்.
வீரர் அணி தொகை
முகமது சேலம் ரூ. 18.40 லட்சம்
விஜய் சங்கர் சேப்பாக்கம் ரூ. 18.00 லட்சம்
முகிலேஷ் திருச்சி ரூ. 17.60 லட்சம்
சுரேஷ் குமார் திருச்சி ரூ. 16.10 லட்சம்
ஹரி நிஷாந்த் சேலம் ரூ. 12 லட்சம்
ஹன்னி திண்டுக்கல் ரூ. 11.7 லட்சம்
ராஜகோபால் சேலம் ரூ. 10 லட்சம்
லோகேஷ்வர் கோவை ரூ. 10 லட்சம்