ADDED : ஆக 11, 2026 11:15 PM

நத்தம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் திருப்பூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில், கோவை அணியை வீழ்த்தியது.
டி.என்.பி.எல்., தொடரில் நேற்று நத்தத்தில் நடந்த மற்றொரு போட்டியில் கோவை, திருப்பூர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருப்பூர் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
கோவை அணிக்கு அபினவ் கண்ணன், சுரேஷ் லோகேஷ்வர் ஜோடி துவக்கம் கொடுத்தது. சிலம்பரசன் வீசிய 2வது ஓவரில் 3 பவுண்டரி அடிக்கப்பட்டன. அபினவ் (5) நிலைக்கவில்லை. இசக்கிமுத்து ஓவரில் சிக்சர் அடித்த சுரேஷ் (22) நீடிக்கவில்லை. 20 பந்தில் 30 ரன் எடுத்த பாலசுப்ரமணியம் சச்சின், ரன் அவுட்டானார்.
இசக்கிமுத்து வீசிய 11 வது ஓவரில் சித்தார்த், அடுத்தடுத்து 6, 4 என விளாசினார். மதிவாணன் ஓவரிலும் சித்தார்த், தொடர்ந்து 4, 6 என அடித்தார். மறுபக்கம் மான் பாவ்னா, 20 ரன்னில் கிளம்பினார். அடுத்த சிறிது நேரத்தில் சாய் கிேஷார் சுழலில், சித்தார்த் (36) அவுட்டானார்.
நடராஜன் 'வேகத்தில்', அம்ப்ரிஸ் (10), கேப்டன் ஷாருக்கான் (18) கிளம்பினர். கோவை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ரன் மட்டும் எடுத்தது. திருப்பூர் சார்பில் நடராஜன், சிலம்பரசன் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
அமித் அபாரம்
திருப்பூர் அணிக்கு அமித் சாத்விக், துஷார் (13) ஜோடி துவக்கம் கொடுத்தது. தீபன் லிங்கேஷ் வீசிய முதல் ஓவரின் 2, 3 வது பந்துகளை அமித், சிக்சருக்கு அனுப்பினார். கேப்டன் சாய் கிேஷார் (5), பிரதோஷ் (4) ஒற்றை இலக்க ரன்களில் திரும்பினர். 22 பந்தில் அரைசதம் எட்டிய அமித், 66 ரன்னில் அவுட்டானார்.
பின் வரிசையில் மதிவாணன் (34, முகமது அலி (29) ஜோடி அவுட்டாகாமல் இருந்து, கைகொடுத்தனர். திருப்பூர் அணி 18 ஓவரில் 167/6 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
