/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
திண்டுக்கல் கலக்கல் வெற்றி * கோவை அணி ஏமாற்றம்
/
திண்டுக்கல் கலக்கல் வெற்றி * கோவை அணி ஏமாற்றம்
ADDED : ஜூன் 14, 2025 11:17 PM

சேலம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் திண்டுக்கல் அணி 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல்., தொடரின் இரண்டாவது கட்ட போட்டி சேலத்தில் நடக்கின்றன. நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் கோவை, சேப்பாக்கம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சேப்பாக்கம் அணி கேப்டன் பாபா அபராஜித் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
அபராஜித் அபாரம்
கோவை அணிக்கு ஜிதேந்திர குமார் (42), 'இம்பாக்ட்' வீரர் சித்தார்த் (26), குரு ராகவேந்திரன் (25) கைகொடுத்தனர். கேப்டன் ஷாருக்கான் 20 ரன் எடுத்தார். கோவை அணி 19.4 ஓவரில் 144 ரன்னில் ஆல் அவுட்டானது.
சேப்பாக்கம் அணி சார்பில் அபிஷேக் தன்வர் 4, பிரேம் குமார், விஜய் சங்கர் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
எளிய இலக்கைத் துரத்திய சேப்பாக்கம் அணிக்கு ஆஷிக் (35), மோகித் ஹரிஹரன் (21) ஜோடி முதல் விக்கெட்டுக்கு 62 ரன் (7.1 ஓவர்) எடுத்தது. கேப்டன் பாபா அபராஜித் 26 பந்தில் 48 ரன், விஜய் சங்கர் 19 பந்தில் 34 ரன் எடுக்க, வெற்றி எளிதானது. சேப்பாக்கம் அணி 15.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
ஷிவம் கலக்கல்
இரண்டாவது போட்டியில் திண்டுக்கல், மதுரை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 'டாஸ்' வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஷ்வின், பீல்டிங் தேர்வு செய்தார்.
மதுரை அணிக்கு ராம் அர்விந்த் (18), பாலசந்தர் (31) ஜோடி ஆறுதல் தந்தது. கேப்டன் சதுர்வேத் (15) ஏமாற்றினார். ஆதீக் ரஹ்மான், 41 பந்தில் 50 ரன் எடுத்தார். மதுரை அணி 20 ஓவரில் 150/8 ரன் மட்டும் எடுத்தது. திண்டுக்கல் சார்பில் சந்திர சேகர், பெரியசாமி தலா 2, வருண் சக்ரவர்த்தி, சந்தீப் தலா 1 விக்கெட் சாயத்தனர்.
பின் களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு அஷ்வின் (49), ஷிவம் சிங் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. ஷிவம் சிங் (86) அரைசதம் அடித்தார். திண்டுக்கல் அணி 12.3 ஓவரில் 151/1 ரன் எடுத்து, 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது.