/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
நமீபியாவை வீழ்த்தியது அமெரிக்கா: 'டி-20' உலக கோப்பையில்
/
நமீபியாவை வீழ்த்தியது அமெரிக்கா: 'டி-20' உலக கோப்பையில்
நமீபியாவை வீழ்த்தியது அமெரிக்கா: 'டி-20' உலக கோப்பையில்
நமீபியாவை வீழ்த்தியது அமெரிக்கா: 'டி-20' உலக கோப்பையில்
ADDED : பிப் 15, 2026 11:32 PM

சென்னை: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் அசத்திய அமெரிக்க அணி, 31 ரன் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தியது.
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் அமெரிக்கா, நமீபியா அணிகள் மோதின.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த அமெரிக்க அணிக்கு கேப்டன் மோனக் படேல், ஷயான் ஜஹாங்கிர் (22) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அபாரமாக ஆடிய மோனக் (52 ரன், 3x6, 3x4) அரைசதம் கடந்தார். பின் இணைந்த சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, மிலிந்து குமார் ஜோடி கைகொடுத்தது. ரூபன் டிரம்பிள்மேன் வீசிய 17வது ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் விளாசிய சஞ்சய், 23 பந்தில் அரைசதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்த போது எராஸ்மஸ் பந்தில் மிலிந்து (28) அவுட்டானார்.
அமெரிக்க அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 199 ரன் எடுத்தது. சஞ்சய் (68 ரன், 6x6, 4x4), சுபம் (5) அவுட்டாகாமல் இருந்தனர். கடின இலக்கை விரட்டிய நமீபிய அணிக்கு ஈடன் (28), ஸ்மித் (31) ஓரளவு கைகொடுத்தனர். ஸ்டீன்கேம்ப் (58) அரைசதம் கடந்தார்.
நமீபிய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 168 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. அமெரிக்கா சார்பில் ஷால்க்விக் 2 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை அமெரிக்காவின் சஞ்சய் வென்றார்.

