தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/வைபவ், குல்தீப் ‘புயல்’ வீசுமா... 5வது ‘டி–20’ சவாலில் எதிர்பார்ப்பு

வைபவ், குல்தீப் ‘புயல்’ வீசுமா... 5வது ‘டி–20’ சவாலில் எதிர்பார்ப்பு

வைபவ், குல்தீப் ‘புயல்’ வீசுமா... 5வது ‘டி–20’ சவாலில் எதிர்பார்ப்பு


ADDED : நவ 01, 2026 03:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2026 03:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாமில்டன்: ஐந்தாவது ‘டி–20’ போட்டியில் இளம் வைபவ் சூர்யவன்ஷி, குல்தீப் யாதவ் வாய்ப்பை எதிர்பார்க்கின்றனர்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. இந்தியா 3–1 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது போட்டி இன்று (நவ.1) ஹாமில்டன், செடான் பார்க் மைதானத்தில் நடக்க உள்ளது.

தடுமாறும் ஷ்ரேயஸ்



இந்திய அணியின் துவக்க வீரர் சஞ்சு சாம்சன் (67, 14, 18, 4) சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகிறார். கடந்த போட்டியில் 15 வயது வைபவ் சூர்யவன்ஷியை நீக்கியது சர்ச்சையை கிளப்பியது. இன்று சஞ்சுவுக்கு பதிலாக வைபவிற்கு வாய்ப்பு அளிக்கலாம். 3வது போட்டியில் 38 பந்தில் 113 ரன் விளாசிய அபிஷேக் சர்மா (4 போட்டி, 196 ரன், ஸ்டிரைக் ரேட் 227.90) நல்ல ‘பார்மில்’ இருப்பது பலம். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கடந்த 8 போட்டிகளில் (40, 1, 16, 22, 42, 7, 5, 22) பெரிதாக சோபிக்கவில்லை. நான்காவது போட்டியில் இஷான் கிஷான், திலக் வர்மா, நமன் திர், நிதிஷ் குமார் ரெட்டி விளாச தவறியதால், ‘மெகா’ இலக்கை எட்ட முடியவில்லை. இன்று ஒட்டுமொத்த பேட்டிங் படையும் அசத்தினால், தொடரை 4–1 என கைப்பற்றலாம்.

பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், அக்சர் படேலை தான் பெரிதும் சார்ந்துள்ளோம். அனுபவ புவனேஷ்வர் குமார் ‘வேகம்’ எடுபடவில்லை. நான்காவது போட்டியில் நியூசிலாந்து 259 ரன் குவித்தது. இதை கட்டுப்படுத்தும் வகையில், இன்று ‘சுழல்’ புயல் குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்ரவர்த்தியை சேர்த்தால், நமன் திர் இடம் பெறுவது கடினம்.

மிரட்டும் பிலிப்ஸ்



நவீன கிரிக்கெட்டில் முக்கியத்துவம் இல்லாத போட்டி என்று எதுவும் கிடையாது. இன்று வென்றால், அடுத்து நடக்க உள்ள ஒருநாள் தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம் என நியூசிலாந்து அணி கருதுகிறது. நான்காவது போட்டியில் 49 பந்தில் 107 ரன் விளாசிய கிளன் பிலிப்ஸ் வெற்றிக்கு வித்திட்டார். 4 போட்டியில் 276 ரன் குவித்துள்ளார். பிரேஸ்வெல் விளாசுவது பலம். பந்துவீச்சில் அசத்த கேப்டன் சான்ட்னர் (4 போட்டி, 9 விக்.,), ஜேக்கப் டபி உள்ளனர்.

யார் ஆதிக்கம்

இரு அணிகளும் 35 ‘டி–20’ போட்டிகளில் மோதின. இந்தியா 22, நியூசிலாந்து 12ல் வென்றன. ஒரு போட்டி ‘டை’ ஆனது.

* ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமானது. பவுண்டரி அளவு குறைவு என்பதால், ரன் எடுப்பது எளிது. ‘வேகங்கள்’ ஓரளவு சாதிக்கலாம்

* ஹாமில்டனில் இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை. இரவு பனிப்பொழிவு ‘ஸ்பின்னர்’களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.

அகிப் நபி வாய்ப்பு

ஐந்தாவது ‘டி–20’ முடிந்ததும், இந்தியா, நியூசிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் (நவ.4–15) மோத உள்ளன. இதற்கான இந்திய அணியில் இருந்து பிரசித் கிருஷ்ணா (தொடை பகுதி பிடிப்பு) விலகினார். இவருக்கு பதில் ‘வேகப்புயல்’ அகிப் நபி வாய்ப்பு பெற்றுள்ளார். 4, 5வது போட்டிக்கான அணியில் மட்டும் இடம் பெற்றிருந்த நபி, தற்போது முழு தொடருக்கும் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us