தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/வருண், திரிஷா பரிந்துரை: ஐ.சி.சி., விருதுக்கு

வருண், திரிஷா பரிந்துரை: ஐ.சி.சி., விருதுக்கு

வருண், திரிஷா பரிந்துரை: ஐ.சி.சி., விருதுக்கு


ADDED : பிப் 06, 2025 10:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2025 10:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துபாய்: ஐ.சி.சி., விருதுக்கு இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி, திரிஷா பரிந்துரைக்கப்பட்டனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது வழங்கப்படுகிறது. ஜனவரி மாதத்திற்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.

சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி, வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வாரிக்கன், பாகிஸ்தானின் நோமன் அலி பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதில் வருண், இங்கிலாந்துக்கு எதிரான 'டி-20' தொடரில், 14 விக்கெட் சாய்த்து தொடர் நாயகன் விருது வென்றிருந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 'சுழலில்' அசத்திய வாரிக்கன், 19 விக்கெட் கைப்பற்றினார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் 'சுழலில்' அசத்திய நோமல் அலி, 16 விக்கெட் வீழ்த்தினார்.

சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு இந்தியாவின் திரிஷா, வெஸ்ட் இண்டீசின் கரிஷ்மா, ஆஸ்திரேலியாவின் பெத் மூனே பரிந்துரைக்கப்பட்டனர். இதில் திரிஷா, சமீபத்தில் முடிந்த 19 வயதுக்குட்பட்ட ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பையில் ஒரு சதம் உட்பட 309 ரன் குவித்தார். தவிர இவர், பவுலிங்கில் 7 விக்கெட் கைப்பற்றினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us