/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அரையிறுதியில் விதர்பா-மகாராஷ்டிரா: விஜய் ஹசாரே டிராபியில்...
/
அரையிறுதியில் விதர்பா-மகாராஷ்டிரா: விஜய் ஹசாரே டிராபியில்...
அரையிறுதியில் விதர்பா-மகாராஷ்டிரா: விஜய் ஹசாரே டிராபியில்...
அரையிறுதியில் விதர்பா-மகாராஷ்டிரா: விஜய் ஹசாரே டிராபியில்...
ADDED : ஜன 12, 2025 11:12 PM

வதோதரா: விஜய் ஹசாரே டிராபி அரையிறுதிக்கு விதர்பா, ஹரியானா அணிகள் முன்னேறின.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் விஜய் ஹசாரே டிராபி 32வது சீசன் நடக்கிறது. குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த காலிறுதியில் விதர்பா, ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற விதர்பா அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
ராஜஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 291 ரன் எடுத்தது. சுபம் கர்வால் (59), கார்த்திக் சர்மா (62), தீபக் ஹூடா (45) கைகொடுத்தனர். விதர்பா சார்பில் யாஷ் தாகூர் 4 விக்கெட் கைப்பற்றினார்.
கருண் கலக்கல்: சவாலான இலக்கை விரட்டிய விதர்பா அணிக்கு துருவ் ஷோரே (118*), கேப்டன் கருண் நாயர் (122*) சதம் விளாச, 43.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 292 ரன் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை துருவ் ஷோரே வென்றார். விஜய் ஹசாரே டிராபியில் இம்முறை கருண் நாயர், தனது 5வது சதத்தை பதிவு செய்தார். ஏழு போட்டியில், 5 சதம் உட்பட 664 ரன் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
மற்றொரு காலிறுதியில் ஹரியானா அணி (201/8, 44 ஓவர்) 2 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை (196/10, 45.2 ஓவர்) வீழ்த்தியது. வதோதராவில் நடக்கும் அரையிறுதியில் ஹரியானா - கர்நாடகா (ஜன. 15), விதர்பா - மகாராஷ்டிரா (ஜன. 16) அணிகள் மோதுகின்றன.