உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : டிச 13, 2024 11:24 PM

அ நிறம் | அளவு
முலபாடு: விஜய் மெர்ச்சன்ட் டிராபி போட்டியில் டிராவிட் மகன் அன்வே சதம் அடித்தார்.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் விஜய் மெர்ச்சன்ட் டிராபி (16 வயது) கிரிக்கெட் தொடர் (3 நாள் போட்டி) நடத்தப்படுகிறது. ஆந்திராவில் நடந்த போட்டியில் கர்நாடகா, ஜார்க்கண்ட் மோதின.
முதலில் விளையாடிய ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 387 ரன் எடுத்தது. கர்நாடக அணிக்கு ஆர்யா (104), கேப்டன் துருவ் கிருஷ்ணன் (122) கைகொடுத்தனர்.
'மிடில் ஆர்டரில்' வந்த டிராவிட் மகன் அன்வே, 153 பந்தில் 100 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். மூன்றாவது, கடைசி நாள் முடிவில் கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 441/3 ரன் எடுக்க போட்டி 'டிரா' ஆனது.
