தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் வெற்றி: இங்கிலாந்து அணி ஏமாற்றம்

வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் வெற்றி: இங்கிலாந்து அணி ஏமாற்றம்

வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் வெற்றி: இங்கிலாந்து அணி ஏமாற்றம்


UPDATED : பிப் 11, 2026 11:12 PM

ADDED : பிப் 11, 2026 10:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2026 11:12 PM ADDED : பிப் 11, 2026 10:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் அசத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன் வித்தியாசத்தில் 2வது வெற்றியை பதிவு செய்தது. இங்கிலாந்து அணி ஏமாற்றம் அடைந்தது.

மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த 'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'சி' பிரிவு லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

ரூதர்போர்டு விளாசல்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஷாய் ஹோப் (0), பிரண்டன் கிங் (1) ஏமாற்றினர். பின் இணைந்த ஷிம்ரன் ஹெட்மயர் (23), ராஸ்டன் சேஸ் (34) ஜோடி நம்பிக்கை தந்தது. ராவ்மன் பாவெல் (14) சோபிக்கவில்லை. வில் ஜாக்ஸ் வீசிய 12வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் விளாசிய ரூதர்போர்டு, ஓவர்டன் பந்தை சிக்சருக்கு அனுப்பி 29 பந்தில் அரைசதம் கடந்தார். சாம் கர்ரான் வீசிய 17வது ஓவரில் 3 சிக்சர் விளாசிய ஜேசன் ஹோல்டர் (33) ஓரளவு கைகொடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்தது. ரூதர்போர்டு (76), ஷெப்பர்டு (1) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஓவர்டன், அடில் ரஷித் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

கர்ரான் ஆறுதல்: சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் (30), பட்லர் (21) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஜேக்கப் பெத்தேல் (33) ஓரளவு கைகொடுத்தார். கேப்டன் புரூக் (17) நிலைக்கவில்லை. அடுத்து வந்த சாம் கர்ரான், குடகேஷ் மோடி, ஹோல்டர் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார். வில் ஜாக்ஸ் (2), ஜேமி ஓவர்டன் (5), ஆர்ச்சர் (6), டாசன் (1) சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.

இங்கிலாந்து அணி 18.5 ஓவரில், 166 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. சாம் கர்ரான் (43) அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் குடகேஷ் மோடி 3, ராஸ்டன் சேஸ் 2 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை ரூதர்போர்டு வென்றார்.

சிக்கலில் இங்கிலாந்து: முதல் போட்டியில் ஸ்காட்லாந்தை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்தது. மீதமுள்ள 2 போட்டியில் (எதிர்: நேபாளம், இத்தாலி), ஒன்றில் வென்றால் கூட 'சூப்பர்-8' சுற்றுக்குள் நுழைந்துவிடும். ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்த இங்கிலாந்து அணி, கடைசி 2 போட்டியிலும் (எதிர்: ஸ்காட்லாந்து, இத்தாலி) வெற்றி பெற்றால் மட்டுமே 'சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us