sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

கோப்பை வென்றது வெஸ்ட் இண்டீஸ்: இங்கிலாந்து அணி ஏமாற்றம்

/

கோப்பை வென்றது வெஸ்ட் இண்டீஸ்: இங்கிலாந்து அணி ஏமாற்றம்

கோப்பை வென்றது வெஸ்ட் இண்டீஸ்: இங்கிலாந்து அணி ஏமாற்றம்

கோப்பை வென்றது வெஸ்ட் இண்டீஸ்: இங்கிலாந்து அணி ஏமாற்றம்


ADDED : நவ 07, 2024 10:05 PM

Google News

ADDED : நவ 07, 2024 10:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரிட்ஜ்டவுன்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் 'பீல்டிங்' தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் (74), டான் மவுஸ்லி (57), சாம் கர்ரான் (40), ஜேமி ஓவர்டன் (32) கைகொடுக்க 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 263 ரன் எடுத்தது. ஜோப்ரா ஆர்ச்சர் (38) அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் மாத்யூ போர்டு 3 விக்கெட் வீழ்த்தினார்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் (102), கீசி கார்டி (128*) நம்பிக்கை அளித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 267 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் விருதை பிரண்டன் கிங் (102 ரன்) வென்றார்.






      Dinamalar
      Follow us