/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மேற்கு மண்டலம் ரன் குவிப்பு: ருதுராஜ் சதம் விளாசல்
/
மேற்கு மண்டலம் ரன் குவிப்பு: ருதுராஜ் சதம் விளாசல்
மேற்கு மண்டலம் ரன் குவிப்பு: ருதுராஜ் சதம் விளாசல்
மேற்கு மண்டலம் ரன் குவிப்பு: ருதுராஜ் சதம் விளாசல்
ADDED : செப் 04, 2025 10:20 PM

பெங்களூரு: துலீப் டிராபி அரையிறுதியில் மேற்கு மண்டல அணியின் ருதுராஜ் சதம் விளாசினார்.
பெங்களூருவில் நடக்கும் துலீப் டிராபி கிரிக்கெட் அரையிறுதியில் மேற்கு, மத்திய மண்டல அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்று முதல் இன்னிங்சை துவக்கிய மேற்கு மண்டல அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (4) ஏமாற்றினார். ஷ்ரேயஸ் ஐயர் (25) நிலைக்கவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் (184) சதம் கடந்தார். தனுஷ் கோடியன் அரைசதம் விளாசினார்.
ஆட்டநேர முடிவில் மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 363/6 ரன் எடுத்திருந்தது. தனுஷ் (65), கேப்டன் ஷர்துல் தாகூர் (24) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஜெகதீசன் சதம்: மற்றொரு அரையிறுதியில் தெற்கு, வடக்கு மண்டல அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்ற வடக்கு மண்டலம், 'பீல்டிங்' தேர்வு செய்தது. தெற்கு மண்டல அணிக்கு நாராயணன் ஜெகதீசன் சதம் கடந்து கைகொடுத்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த தேவ்தத் படிக்கல் (57) அரைசதம் விளாசினார்.
ஆட்டநேர முடிவில் தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 297/3 ரன் எடுத்திருந்தது. ஜெகதீசன் (148), கேப்டன் முகமது அசாருதீன் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.