/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
எங்கே சென்றார் கோலி * டெஸ்ட் தொடரில் விலகலா
/
எங்கே சென்றார் கோலி * டெஸ்ட் தொடரில் விலகலா
ADDED : பிப் 01, 2024 10:57 PM

புதுடில்லி: கோலி வெளிநாடு சென்றுள்ளதால், டெஸ்ட் அணியை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்டில் பங்கேற்கும் இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஆனால் முதல் இரு டெஸ்டில் இடம் பெறாத கோலி, வேகப்பந்து வீச்சாளர் ஷமி வருகை சந்தேகமாக உள்ளது. கணுக்கால் காயத்தில் விலகிய ஷமி, தற்போது லண்டனில் உள்ளார். காயத்துக்கு சிகிச்சை எடுத்து வரும் இவர், டெஸ்டில் விளையாடும் நிலையில் இல்லை. ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கலாம்.
தனிப்பட்ட காரணங்களுக்காக சீனியர் விராத் கோலி விலகினார். இவரது தாயார் சரோஜ், கல்லீரல் பாதிப்பால் அவதிப்படுவதாக செய்தி வெளியாகின. இதை கோலி சகோதரர், விகாஷ் மறுத்தார். தற்போது இந்தியாவில் கோலி இல்லை. இவர் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார், எப்போது திரும்புவார் என எதுவும் இந்திய கிரிக்கெட் போர்டிடம் தெரிவிக்கப்படவில்லை.
தவிர வலது தொடைப்பகுதி காயத்தால் ராகுல், தொடை பின்பகுதி காயத்தால் ஜடேஜா என முன்னணி வீரர்கள் அவதிப்படுகின்றனர். இதனால் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிக்கான அணியை எப்போது அறிவிப்பது என அகார்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர்.