தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தரிசனம் தருவாரா தோனி: சென்னை ரசிகர்கள் எதிர்பார்ப்பு

தரிசனம் தருவாரா தோனி: சென்னை ரசிகர்கள் எதிர்பார்ப்பு

தரிசனம் தருவாரா தோனி: சென்னை ரசிகர்கள் எதிர்பார்ப்பு


ADDED : மே 17, 2026 10:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2026 10:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை அணி இக்கட்டான நிலையில் உள்ளது. எஞ்சிய இரு லீக் போட்டிகளில் நல்ல ரன் ரேட்டில் கட்டாயம் வெல்ல வேண்டும். பின் மற்ற அணிகளின் செயல்பாட்டை பொறுத்து 'பிளே-ஆப்' வாய்ப்பை எதிர்பார்க்கலாம்.

சேப்பாக்கம் மைதானத்தில் இந்த சீசனில் தனது கடைசி போட்டியில் (மே 18) 'ஐந்து முறை சாம்பியன்' சென்னை அணி, ஐதராபாத்தை சந்திக்கிறது. இம்முறை 'சீனியர்' தோனி, 44, கால் தசை பிடிப்பு காரணமாக விளையாடவில்லை. இவர், இத்தொடருடன் ஓய்வு பெறலாம். தற்போது காயத்தில் இருந்து குணமடைந்துள்ள இவர், இன்று சொந்த மண்ணில் களமிறங்கி, சென்னை ரசிகர்களுக்கு 'சர்ப்ரைஸ்' கொடுக்கலாம்.

சென்னை அணிக்கு 'சேட்டன்' சஞ்சு சாம்சன் (450 ரன், 12 போட்டி), கேப்டன் ருதுராஜ் (306 ரன், 12 போட்டி) நல்ல துவக்கம் தர வேண்டும். 'மிடில் ஆர்டரில்' அசத்த கார்த்திக் சர்மா, உர்வில் படேல், பிரவிஸ் உள்ளனர். கடைசி கட்டத்தில் ஷிவம் துபே, பிரஷாந்த் வீர் வாணவேடிக்கை காட்டலாம்.

பவுலிங் பலவீனம்: லக்னோவுக்கு எதிராக சென்னை பவுலர்கள் சொதப்பினர். இன்று எழுச்சி பெற வேண்டும். கம்போஜ் (19 விக்கெட்), முகேஷ் சவுத்ரி, குர்ஜப்னீத் சிங் கட்டுக்கோப்பாக பந்துவீச வேண்டும். 'சுழலில்' அகீல் ஹூசைன், நுார் அகமது மிரட்டலாம்.

பேட்டிங் பலம்: ஐதராபாத் அணி கடந்த போட்டியில் 86 ரன்னுக்கு (எதிர், குஜராத்) சுருண்ட சோகத்தில் உள்ளது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், கிளாசன், நிதிஷ் குமார், கேப்டன் பாட் கம்மின்ஸ் என பேட்டிங் நீள்கிறது.

பந்துவீச்சில் கம்மின்ஸ், பிரபுல் ஹிங்கே, சாகிப் கைகொடுக்கலாம்.

யார் ஆதிக்கம்

இரு அணிகளும் 24 போட்டிகளில் மோதின. சென்னை 16, ஐதராபாத் 8ல் வென்றன.

* சேப்பாக்கம் ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமானது. 'ஸ்பின்னர்'கள் சாதிக்கலாம்.

* மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us