/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆஸ்திரேலிய மண்ணில் சாதிக்குமா இந்தியா 'ஏ'
/
ஆஸ்திரேலிய மண்ணில் சாதிக்குமா இந்தியா 'ஏ'
ADDED : அக் 30, 2024 06:51 PM

மெக்கே: ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான நான்கு நாள் போட்டியில் இந்தியா 'ஏ' அணி சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா 'ஏ' அணி, இரண்டு போட்டி (நான்கு நாள் ஆட்டம்) கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 'ஏ' அணியுடன் விளையாடுகிறது. மெக்கே நகரில் முதல் போட்டி அக். 31ல் துவங்குகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் இந்தியா 'ஏ' அணி களமிறங்குகிறது. அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' தொடருக்கு தேர்வான, துணை கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன், நிதிஷ் குமார் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 99 முதல் தர போட்டியில் (7638 ரன், 27 சதம், 29 அரைசதம்) பங்கேற்றுள்ள அபிமன்யு ஈஸ்வரன் சிறப்பாக விளையாடும் பட்சத்தில், ரோகித் சர்மாவுக்கு பதிலாக துவக்க வீரராக களமிறங்கலாம். சமீபத்தில் முடிந்த துலீப் டிராபி (157, 116 ரன்), இரானி கோப்பை (191), ரஞ்சி கோப்பையில் (127) அசத்திய ஈஸ்வரன், ஆஸ்திரேலிய மண்ணிலும் சாதிக்கலாம்.
பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ், தேவ்தத் படிக்கல், சாய் சுதர்சன், பாபா இந்திரஜித், ரிக்கி புய், இஷான் கிஷான், அபிஷேக் போரெல் பலம் சேர்க்கின்றனர். தனுஷ், நிதிஷ் குமார், மானவ் சுதார் 'ஆல்-ரவுண்டராக' ஜொலிக்கலாம். 'வேகத்தில்' கலீல் அகமது, நவ்தீப் சைனி, 'சுழலில்' முகேஷ் குமார் அசத்த காத்திருக்கின்றனர்.
ஆஸ்திரேலியா 'ஏ' அணி சொந்த மண்ணில் விளையாடுவது சாதகம்.