தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/வெற்றியுடன் துவக்குமா இந்தியா: அமெரிக்காவுடன் முதல் மோதல்

வெற்றியுடன் துவக்குமா இந்தியா: அமெரிக்காவுடன் முதல் மோதல்

வெற்றியுடன் துவக்குமா இந்தியா: அமெரிக்காவுடன் முதல் மோதல்


ADDED : பிப் 06, 2026 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 11:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் இன்று இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.

இந்தியா, இலங்கையில், ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் இன்று துவங்குகிறது. 'நடப்பு சாம்பியன்' இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 20 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறும்.

பலமான பேட்டிங்: மும்பை, வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி, அமெரிக்காவை சந்திக்கிறது. ரோகித், கோலி, ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி 'டி-20' உலக கோப்பையில் முதன்முறையாக களமிறங்குகிறது. கடந்த 2024ல் 'டி-20' உலக சாம்பியன் பட்டம் வென்ற பின், இந்திய அணி வரிசையாக 9 'டி-20' தொடர்களை கைப்பற்றியது.

கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கும் உலகின் 'நம்பர்-1' இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. அபிஷேக் சர்மா, இஷான் கிஷான் ஜோடி எதிரணி பந்துவீச்சை அடித்து நொறுக்குவது பலம். சூர்யகுமாரும் மைதானத்தின் நாலாபுறமும் பந்தை விளாசுகிறார். 'மிடில்-ஆர்டரில்' திலக் வர்மா ரன் மழை பொழியலாம். 'ஆல்-ரவுண்டராக' ஹர்திக் பாண்ட்யா, துணை கேப்டன் அக்சர் படேல், ஷிவம் துபே கைகொடுக்க உள்ளனர். ரிங்கு சிங், சிறந்த 'பினிஷிங்' தரலாம்.

வேகத்தில் மிரட்ட பும்ரா, அர்ஷ்தீப் சிங் காத்திருக்கின்றனர். 'சுழலில்' அசத்த வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் கைகொடுக்கலாம். சமீபத்திய நியூசிலாந்து தொடரில் அசத்திய இந்திய வீரர்கள் மீண்டும் ஜொலித்தால் தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.

மோனக் நம்பிக்கை: அமெரிக்க அணியில் 9 இந்திய வம்சாவளி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மோனக் படேல் தலைமையிலான அமெரிக்க அணி, கடந்த ஆண்டு விளையாடிய 9 'டி-20' போட்டியில், 8ல் வென்றது. சமீபத்தில் நவி மும்பையில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் 7 ரன்னில் மட்டுமே தோற்றது. பேட்டிங்கில் மோனக் படேல், சைதேஜா, மிலிந்த் குமார் கைகொடுக்கலாம். பவுலிங்கில் சவுரப் நேத்ராவல்கர், சுபம் ரஞ்சனே, ஹர்மீத் சிங் சாதிக்கலாம்.

இரண்டாவது முறை

இந்தியா, அமெரிக்கா அணிகள் 'டி-20'ல் 2வது முறையாக மோதுகின்றன. இதற்கு முன், கடந்த ஆண்டு நியூயார்க்கில் நடந்த 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி (111/3) 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவை (110/8) வீழ்த்தியது.

ஹர்ஷித் சந்தேகம்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் முழங்காலில் காயமடைந்த இளம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா 24, 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்பது சந்தேகம். ஒருவேளை விலகினால் இவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அல்லது முகமது சிராஜ் தேர்வாகலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us