/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மெல்போர்னில் வெல்லுமா இந்தியா: ஆஸ்திரேலியாவுடன் 2வது மோதல்
/
மெல்போர்னில் வெல்லுமா இந்தியா: ஆஸ்திரேலியாவுடன் 2வது மோதல்
மெல்போர்னில் வெல்லுமா இந்தியா: ஆஸ்திரேலியாவுடன் 2வது மோதல்
மெல்போர்னில் வெல்லுமா இந்தியா: ஆஸ்திரேலியாவுடன் 2வது மோதல்
ADDED : அக் 30, 2025 11:06 PM

மெல்போர்ன்: மெல்போர்னில் நடக்கும் 'டி-20' போட்டியில் இந்திய வீரர்கள் ரன் மழை பொழிய காத்திருக்கின்றனர்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. கான்பெராவில் நடந்த முதல் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. இரண்டாவது போட்டி (அக். 31) மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது.
விளாசல் வீரர்கள்: இந்திய அணியில் 'டி-20' கலையில் கைதேர்ந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், துணை கேப்டன் சுப்மன் கில், திலக் வர்மா, ஷிவம் துபே, சாம்சன், ரிங்கு சிங் இருப்பது பலம். கடந்த போட்டியில் 24 பந்தில் 39 ரன் விளாசினார் சூர்யகுமார். அதிலும் ஹேசல்வுட் பந்தில் இவர் அடித்த இமாலய சிக்சரை (125 மீ., துாரம்) எளிதில் மறக்க முடியாது. இவரது அதிரடி தொடரலாம். 250-260 ரன்னை எட்டுவதை இலக்காக கொண்டு பேட் செய்ய வேண்டுமென பயிற்சியாளர் காம்பிர் அறிவுறுத்தியுள்ளார். இதனால் இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்டி, முதல் வெற்றியை ருசிக்கலாம்.
மழை காரணமாக முதல் போட்டியில் பந்துவீசும் வாய்ப்பு பும்ரா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேலுக்கு கிடைக்கவில்லை. இன்று இவர்கள் சாதிக்கலாம்.
பவுலிங் பலவீனம்: ஆஸ்திரேலிய அணியில் கேப்டன்  மிட்சல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், டிம் டேவிட், ஸ்டாய்னிஸ், மிட்சல் ஓவன், இங்லிஸ், ஜோஷ் பிலிப் உள்ளிட்ட 'அதிரடி' வீரர்கள் உள்ளனர். ஸ்டார்க் (ஓய்வு), பாட் கம்மின்ஸ் (காயம்) இல்லாததால், பந்துவீச்சு பலவீனமாக உள்ளது. ஹேசல்வுட், எல்லிஸ், அபாட், பார்ட்லெட், குனேமென் கைகொடுக்கலாம்.
மழை தொல்லை
* மெல்போர்னில் (அக். 31) மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது. போட்டி பாதிக்கப்படலாம்.
* ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். பெரிய மைதானம் என்பதால், கவனமாக பேட் செய்ய வேண்டும்.
* போட்டியை காண மெல்போர்ன் அரங்கில் 90,000 ரசிகர்கள் வரலாம்.
* மெல்போர்னில் இரு அணிளும் 4 'டி-20' போட்டியில் மோதின. இந்தியா 2, ஆஸி., 1ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

