தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா: இங்கிலாந்துடன் 5வது மோதல்

ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா: இங்கிலாந்துடன் 5வது மோதல்

ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா: இங்கிலாந்துடன் 5வது மோதல்

1


UPDATED : ஜூலை 11, 2026 05:23 PM

ADDED : ஜூலை 10, 2026 11:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2026 05:23 PM ADDED : ஜூலை 10, 2026 11:19 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சவுத்தாம்ப்டன்: ஐந்தாவது 'டி-20' போட்டியில், இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கலாம்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. நேற்று முன் தினம் பிரிஸ்டலில் நடந்த நான்காவது போட்டியில் இந்திய அணி (20 ஓவர், 158/7), இங்கிலாந்திடம் ( 13.5 ஓவர், 159/1) 9 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வி அடைந்தது. தொடரை 0-3 என இழந்தது.

சிக்கலில் காம்பிர்: ஐந்தாவது போட்டி சவுத்தாம்ப்டன், ரோஸ் பவுல் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்திய 'டி-20' அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர், இன்னும் முதல் வெற்றியை தேடுகிறார். அயர்லாந்துக்கு எதிரான தொடரை ஏற்கனவே இழந்தார். 'டி-20' உலக சாம்பியனான இந்திய அணியின் தொடர் வீழ்ச்சி, பயிற்சியாளர் காம்பிர் வியூகம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 2வது போட்டியின் 17வது ஓவரில் 'ஸ்பின்னர்' பிஷ்னோய் 29 ஓவர் ரன் வாரி வழங்கியது வினையாக அமைந்தது. 3வது போட்டியில் 76 ரன்னுக்கு சுருண்டு, மோசமாக தோற்றது. நான்காவது போட்டியில் ஷ்ரேயஸ், 80 ரன் எடுத்த போதும், மற்றவர்கள் ஏமாற்ற, தொடரை இழக்க நேரிட்டது.

தடுமாறும் 'பேட்டிங்': இங்கிலாந்து 'வேகப்புயல்' ஜோப்ரா ஆர்ச்சர், ஜோஷ் டங், சாம் கர்ரானை சமாளிக்க முடியாததே இந்திய அணியின் பலவீனம். இவர்களது 'ஷார்ட்-பிட்ச்' பந்தில் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி தடுமாறுகிறார். துவக்கத்தில் சஞ்சு சாம்சன் இல்லாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரை சேர்த்தால், திலக் வர்மாவை நீக்க வேண்டும். அப்போது இஷான் கிஷான், ஷ்ரேயஸ் பின்வரிசையில் வர வேண்டும். 3வது இடத்தை கடந்து இஷானை களமிறக்குவதால் பலனில்லை. இன்று இந்திய அணி பொறுப்பாக ஆடினால், 'ஒயிட்வாஷ்' அவமானத்தில் இருந்து தப்பலாம்.

பந்துவீச்சில் காயம் காரணமாக வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா விலகியது பின்னடைவு. அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், அக்சர் படேல் கைகொடுக்க வேண்டும்.

ஹாரி புரூக் மிரட்டல்: இங்கிலாந்து அணி வலுவாக உள்ளது. நான்காவது போட்டியில் 35 பந்தில் 79 ரன் விளாசிய கேப்டன் ஹாரி புரூக், பில் சால்ட் (59 ரன்) நல்ல 'பார்மில்' உள்ளனர். அனுபவ பட்லர், பெத்தல், பான்டன் விளாசலாம். 'வேகத்தில்' ஆர்ச்சர், 'சுழலில்' வில் ஜாக்ஸ், அடில் ரஷித் அசத்துவது பலம்.

யார் ஆதிக்கம்

இரு அணிகளும் 34 'டி-20' போட்டியில் மோதின. இந்தியா 18, இங்கிலாந்து 15ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

* சவுத்தாம்ப்டன், ரோஸ் பவுல் ஆடுகளத்தில் பேட்டர்கள் சாதிக்கலாம்.

* இன்று மழை பெய்ய வாய்ப்பு இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us