தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/மீண்டும் சாதிப்பாரா சஞ்சு சாம்சன்: சென்னை-கொல்கட்டா அணிகள் மோதல்

மீண்டும் சாதிப்பாரா சஞ்சு சாம்சன்: சென்னை-கொல்கட்டா அணிகள் மோதல்

மீண்டும் சாதிப்பாரா சஞ்சு சாம்சன்: சென்னை-கொல்கட்டா அணிகள் மோதல்


ADDED : ஏப் 13, 2026 11:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 11:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சஞ்சு சாம்சன் மீண்டும் விளாசினால், சென்னை அணி இரண்டாவது வெற்றியை ருசிக்கலாம். சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் (ஏப். 14) சென்னை, கொல்கட்டா அணிகள் மோதுகின்றன.

வருவாரா தோனி: சென்னை அணி முதல் மூன்று போட்டிகளில் தோற்றது. பின் டில்லிக்கு எதிராக 'சேட்டன்' சஞ்சு சாம்சன் சதம் (56 பந்தில் 115 ரன்) விளாச, முதல் வெற்றியை பெற்றது. இவருடன் துவக்க வீரராக களமிறங்கும் கேப்டன் ருதுராஜ் தடுமாறுவது பலவீனம். இன்று ரன் குவித்தால் நல்லது. கடந்த போட்டியில் அரைசதம் கடந்த ஆயுஷ் மாத்ரே அருமையான 'பார்மில்' உள்ளார். இவரை தவிர, 'மிடில் ஆர்டரில்' பிரவிஸ், சர்பராஸ் கான் நம்பிக்கை தருகின்றனர். கடைசி கட்ட அதிரடிக்கு ஷிவம் துபே உள்ளார். கால் தசை பிடிப்பில் இருந்து மீண்ட தோனி, இடம் பெறுவது சந்தேகம்.

வேகப்பந்துவீச்சில் ஜேமி ஓவர்டன் அசத்துகிறார். டில்லிக்கு எதிராக 4 விக்கெட் வீழ்த்தி, வெற்றிக்கு கைகொடுத்தார். குர்ஜப்னீத் சிங், கலீல் அகமது, கம்போஜ் மிரட்டலாம். 'சுழல்' ஜாலத்திற்கு அகீல் ஹூசைன், நுார் அகமது உள்ளனர்.

நரைன் பலம்: கொல்கட்டா அணி இன்னும் ஒரு வெற்றி கூட பெறவில்லை. கடந்த போட்டியில் வெற்றியை நெருங்கியது. ஆனால், லக்னோவின் முகுல் சவுத்ரி அதிரடியாக அரைசதம் விளாசி, வாய்ப்பை பறித்துச் சென்றார். இந்த அதிர்ச்சியில் இருந்து கொல்கட்டா மீள வேண்டும். துவக்கத்தில் கேப்டன் ரஹானே, ரகுவன்ஷி ரன் குவிப்பது பலம். ஆலன் தடுமாறுகிறார். கேமரான் கிரீன் 'ஆல்-ரவுண்டராக' அசத்தலாம். ராவ்மென் பாவெல், ரிங்கு சிங் எழுச்சி பெற வேண்டும்.

பந்துவீச்சில் வைபவ் அரோரா, செய்னி, கார்த்திக் தியாகி ரன்னை கட்டுப்படுத்துவது அவசியம். அனுபவ 'சுழல் மாயாவி' சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி சாதிக்க முயற்சிக்கலாம்.

யார் ஆதிக்கம்

இரு அணிகளும் 31 போட்டிகளில் மோதின. சென்னை 20, கொல்கட்டா 11ல் வென்றன.

* சேப்பாக்கத்தில் 12 முறை மோதின. சென்னை 8, கொல்கட்டா 4ல் வென்றன.

மழை வருமா

சென்னையில் (ஏப். 14) மழைக்கு வாய்ப்பு இல்லை

* சேப்பாக்கம் ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமானது.

அட்டவணை மாற்றம்

ஆமதாபாத்தில், வரும் ஏப். 26ல் குஜராத்-சென்னை அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நடக்க இருந்தது. ஆனால் அன்று, குஜராத்தில் மாநகராட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதனால் இப்போட்டி, சென்னைக்கு (ஏப். 26) மாற்றப்படுகிறது. வரும் மே 21ல் சென்னையில் நடக்க இருந்த இவ்விரு அணிகள் மோதும் போட்டி, ஆமதாபாத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us