ADDED : ஆக 30, 2024 10:59 PM

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் புகோவ்ஸ்கி 26. இவருக்கு தலையில் காயம் ஏற்படுவது சகஜம். பள்ளி கால்பந்து போட்டியில் சக வீரருடன் தலையில் மோதிக் கொண்டார். கிரிக்கெட் பயிற்சியில் பந்து, இவரது 'ஹெல்மெட்' மீது தாக்கியது. மூன்றாவது முறையாக வீட்டு கதவு மீது, தலையில் இடித்துக் கொண்டார்.
இவருக்கு வேகப்பந்து வீச்சு என்றால் அலர்ஜி. 2017ல் 3, 2018, 2020ல் ஒரு முறை என, முதல் தர போட்டியில் தலையில் அடிபட்டது. 2020ல் இந்தியாவுக்கு எதிரான பயிற்சியில் 'ஹெல்மெட்டில்' பந்து தாக்கியது. 2021ல் இந்திய டெஸ்டில் அறிமுகம் ஆனார். இதில் 62, 10 ரன் எடுத்தார். மீண்டும் 2021, 2022, 2024, ஜன.,ல் பந்து தாக்கியது.
கடந்த மார்ச் மாதம், உள்ளூர் போட்டியில் மெரிடித் வீசிய பந்து, தாக்கியதால் மறுபடியும் மூளையில் அதிர்வு ஏற்பட்டது. 2018க்குப் பின் 13வது முறையாக இதுபோன்ற சம்பவம் நடந்தது. இதனால்,' அதிகமுறை தலையில் பந்து தாக்கியுள்ளது. இனிமேல் கிரிக்கெட் விளையாட வேண்டாம்,' என்ற மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனால், புகோவ்ஸ்கி ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

