தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/பெண்கள் உலக கோப்பை அட்டவணை வெளியானது

பெண்கள் உலக கோப்பை அட்டவணை வெளியானது

பெண்கள் உலக கோப்பை அட்டவணை வெளியானது


ADDED : ஜூன் 16, 2025 11:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2025 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 13 வது சீசன் வரும் செப்டம்பர் 30ல் இந்தியாவில் துவங்குகிறது. 1978, 1997, 2013க்குப் பின் நான்காவது முறையாக இந்தியாவில் இத்தொடர் நடக்கவுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா உட்பட 8 அணிகள் பங்கேற்க உள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் 'டாப்-4' இடம் பெறும் அணிகள், அரையிறுதிக்கு முன்னேறும்.

இதற்கான அட்டவணை நேற்று வெளியானது. போட்டிகள் பெங்களூரு, இந்துார், கவுகாத்தி, விசாகப்பட்டனத்தில் நடக்க உள்ளன. பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகள் இலங்கையின் கொழும்புவில் நடக்கும்.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, செப். 30ல் தனது முதல் போட்டியில் இலங்கையை (பெங்களூரு) சந்திக்கும். தென் ஆப்ரிக்கா (அக். 9), ஆஸ்திரேலியா (அக். 12), இங்கிலாந்து (அக். 19), நியூசிலாந்து (அக். 23), வங்கதேச (அக். 26) அணிகளை சந்திக்க உள்ளது.

முதல் அரையிறுதி அக். 29ல் கவுகாத்தி அல்லது கொழும்புவில் நடக்கும். இரண்டாவது அரையிறுதி பெங்களூருவில் அக். 30ல் நடக்கும். பைனல் நவ. 2ல் பெங்களூரு அல்லது கொழும்புவில் நடக்கும்.



யார் யாருடன்...

இந்திய பெண்கள் அணி மோதும் போட்டி விபரம்:

தேதி எதிரணி இடம்

செப். 30 இலங்கை பெங்களூரு

அக். 5 பாகிஸ்தான் கொழும்பு

அக். 9 தென் ஆப்ரிக்கா விசாகப்பட்டனம்

அக். 12 ஆஸ்திரேலியா விசாகப்பட்டனம்

அக். 19 இங்கிலாந்து இந்துார்

அக். 23 நியூசிலாந்து கவுகாத்தி

அக். 26 வங்கதேசம் பெங்களூரு

* போட்டிகள் மதியம் 3:00 மணிக்கு துவங்கும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us