/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா இந்தியா * இன்று தென் ஆப்ரிக்காவுடன் மோதல்
/
'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா இந்தியா * இன்று தென் ஆப்ரிக்காவுடன் மோதல்
'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா இந்தியா * இன்று தென் ஆப்ரிக்காவுடன் மோதல்
'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா இந்தியா * இன்று தென் ஆப்ரிக்காவுடன் மோதல்
ADDED : அக் 08, 2025 10:50 PM

விசாகப்பட்டனம்: பெண்கள் உலக கோப்பை லீக் போட்டியில் இன்று இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது.
இந்தியாவில் பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 8 அணிகள், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதுகின்றன. முடிவில் புள்ளிப்பட்டியலில் 'டாப்-4' இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறலாம்.
இந்திய அணி முதல் போட்டியில் 124/6 (இலங்கை), அடுத்து 159/5 என இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வந்து வெற்றி பெற்றது. 4 புள்ளியுடன் உள்ளது.
இன்று மூன்றாவது போட்டியில் தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது. முதல் இரு போட்டியில் ஹர்லீன் (48, 46 ரன்), தீப்தி சர்மா (53, 25), ரிச்சா (2, 35), அமன்ஜோத் கவுர் (57) கைகொடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா (23, 8), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (21, 19), ஏமாற்றம் தருகின்றனர். ஜெமிமா எழுச்சி பெற்றால் நல்லது. துவக்கத்தில் பிரதிகா (68) நம்பிக்கை தருகிறார்.
பவுலிங்கில் 'ஆல் ரவுண்டர்' தீப்தி சர்மா இதுவரை 6 விக்கெட் சாய்த்துள்ளது பலம். தவிர கிராந்தி (4), ஸ்னே ராணா (4) தங்கள் பங்கிற்கு உதவுவது தொடர்ந்தால், இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறலாம்.
தென் ஆப்ரிக்க அணி முதல் போட்டியில் 69 ரன்னுக்கு சுருண்டு தோற்றது. அடுத்து சுதாரித்துக் கொண்ட தென் ஆப்ரிக்கா (234/4), நியூசிலாந்து (231/10) இலக்கை, 40.5 ஓவரில் 'சேஸ்' செய்து வென்றது. சதம் அடித்த தஸ்மின் பிரிட்ஸ், சுனே லஸ் பேட்டிங்கில் ரன் மழை பொழிகின்றனர். கேப்டன் லாரா (5, 14) இன்று மீண்டு வர முயற்சிக்கலாம்.