/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பும்ரா, ஜடேஜா 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில்
/
பும்ரா, ஜடேஜா 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில்
ADDED : அக் 08, 2025 10:40 PM

துபாய்: ஐ.சி.சி., தரவரிசையில் இந்தியாவின் பும்ரா, ஜடேஜா முதலிடத்தில் நீடிக்கின்றனர்.
டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பவுலர் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா, 885 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
சமீபத்தில் ஆமதாபாத்தில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் வேகத்தில் மிரட்டிய இவர், 3 விக்கெட் சாய்த்தார். இப்போட்டியில் 7 விக்கெட் கைப்பற்றிய மற்றொரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், 15வது இடத்தில் இருந்து முதன்முறையாக 12வது இடத்துக்கு முன்னேறினார். நான்கு விக்கெட் வீழ்த்திய இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், 7 இடங்கள் முன்னேறி 21வது இடத்தை பகிர்ந்து கொண்டார்.
பேட்டர் தரவரிசையில், இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா, லோகேஷ் ராகுல், முறையே 25, 35வது இடத்தை கைப்பற்றினார். இருவரும், ஆமதாபாத் டெஸ்டில் சதம் விளாசினர்.
'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ஜடேஜா, முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர், 11வது இடத்துக்கு முன்னேறினார்.