/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தொடரை வென்றது இந்தியா: யூத் டெஸ்டில் அசத்தல்
/
தொடரை வென்றது இந்தியா: யூத் டெஸ்டில் அசத்தல்
ADDED : அக் 08, 2025 10:39 PM

மக்காய்: யூத் டெஸ்டில் அசத்திய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, 2-0 என தொடரை கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா சென்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட யூத் டெஸ்டில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் மக்காய் நகரில் நடந்தது.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 135 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 144/7 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஹெனில் படேல் (22), தீபேஷ் (28) கைகொடுக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் 171 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
இரண்டாவது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி 116 ரன்னுக்கு சுருண்டது. அலெக்ஸ் லீ யங் (38) ஆறுதல் தந்தார். இந்தியா சார்பில் ஹெனில், நமன் புஷ்பக் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
பின், 81 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு வேதாந்த் திரிவேதி (33*), விஹால் மல்ஹோத்ரா (21), கேப்டன் ஆயுஷ் மாத்ரே (13), ராகுல் குமார் (13*) கைகொடுத்தனர். இந்திய அணி 2வது இன்னிங்சில் 84/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது.