/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கட்டாய வெற்றி நோக்கி இந்தியா * நியூசிலாந்துடன் இன்று மோதல்
/
கட்டாய வெற்றி நோக்கி இந்தியா * நியூசிலாந்துடன் இன்று மோதல்
கட்டாய வெற்றி நோக்கி இந்தியா * நியூசிலாந்துடன் இன்று மோதல்
கட்டாய வெற்றி நோக்கி இந்தியா * நியூசிலாந்துடன் இன்று மோதல்
ADDED : அக் 22, 2025 10:42 PM

நவி மும்பை: உலக கோப்பை தொடரில் இன்று இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. காலிறுதி போன்ற இந்த சவாலில் வெல்லும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு அதிகம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.
கட்டாய வெற்றி
இன்று நவி மும்பையில் நடக்கும் லீக் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இரு அணிக்கும் காலிறுதி போன்ற இந்த மோதலில், வெல்லும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு அதிகரிக்கும்.
கடந்த போட்டியில் 54 பந்தில் 56 ரன் தேவை, கைவசம் 7 விக்கெட் இருந்த போதும், இந்திய அணி 'ஆல் அவுட்டாகி' தோற்றது. இன்று ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாக உள்ளதால், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா மீண்டும் பொறுப்பான ஆட்டத்தை தர வேண்டும்.
6 பவுலர்களுடன் களமிறங்குவதால், ஜெமிமா சேர்க்கப்படுவது இல்லை. இதனால் 3வதாக வரும் ஹர்லீனுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது. தவிர முன்னணி வீராங்கனைகள் ஏமாற்றுவதால், போட்டியை 'பினிஷிங்' செய்ய ரிச்சா கோஷை அதிகம் நம்ப வேண்டிய நிலை உள்ளது. பவுலிங்கில் தீப்தி சர்மா, ஸ்னே ராணா, ஸ்ரீசரனி என யாரும் சீரான திறமை வெளிப்படுத்தாதது பலவீனம்.
'சீனியர்' பலம்
நியூசிலாந்து அணி இதுவரை 5 போட்டியில் 4 புள்ளி பெற்றுள்ளது. 'சீனியர்கள்' சுஜி பேட்ஸ் 38, கேப்டன் சோபி டிவைன் 36, என இருவரும் சுமார் 20 ஆண்டுகளாக வெற்றிக்கு கைகொடுத்து வருகின்றனர். தவிர அமேலியா, 'ஆல் ரவுண்டர்' ரோஸ்மேரி இந்தியாவுக்கு தொல்லை தரலாம்.
யாருக்கு வாய்ப்பு
உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தென் ஆப்ரிக்கா (10), ஆஸ்திரேலியா (9), இங்கிலாந்து (9) அணிகள் முன்னேறின. மீதமுள்ள ஒரு இடத்தை பிடிக்க இந்தியா உட்பட 3 அணிகள் போட்டியிடுகின்றன.
* தற்போது 4 புள்ளி பெற்றுள்ள இந்திய அணி, அடுத்த இரு போட்டியில் நியூசிலாந்து (இன்று), வங்கதேசத்தை (அக். 26) வென்றால், 8 புள்ளியுடன் அரையிறுதிக்கு செல்லலாம்.
* ஒருவேளை இன்று தோற்றால், அடுத்து வங்கதேசத்தை, இந்தியா வெல்ல வேண்டும். மறுபக்கம் நியூசிலாந்து, இங்கிலாந்திடம் தோற்க வேண்டும். இதனால் இந்தியா, நியூசிலாந்து தலா 6 புள்ளி பெறும். ரன் ரேட் அடிப்படையில் முந்தி, இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும்.