ADDED : நவ 01, 2026 03:05 PM

மிர்புர்: வங்க தேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேசம் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மிர்புரில் நடந்தது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 272, வெஸ்ட் இண்டீஸ் 245 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில் வங்கதேச அணி, 2வது இன்னிங்சில் 79/6 ரன் எடுத்திருந்தது.
நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. ஜேக்கர் அலி (22) ஏமாற்றினார். மற்றவர்கள் ஏமாற்ற, நயீம் ஹசன் மட்டும் 52 ரன் எடுத்தார். வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 142 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ராஸ்டன் சேஸ் 5, வாரிகன் 4 விக்கெட் வீழ்த்தினர்.
2வது இன்னிங்சில் 170 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங், கேம்ப்பெல் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 112 ரன் சேர்த்த போது, கேம்ப்பெல் (49) அவுட்டானார். பிரண்டன் அரைசதம் அடிக்க, வெற்றி எளிதானது. வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட்டுக்கு 170 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பிரண்டன் (81), ஹாட்ஜ் (31) அவுட்டாகாமல் இருந்தனர்.
