தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/உலக கோப்பை: ஸ்டோக்ஸ் விலகல்

உலக கோப்பை: ஸ்டோக்ஸ் விலகல்

உலக கோப்பை: ஸ்டோக்ஸ் விலகல்


ADDED : ஏப் 02, 2024 09:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2024 09:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லண்டன்: 'டி-20' உலக கோப்பை தொடரில் இருந்து ஸ்டோக்ஸ் விலகினார்.

இங்கிலாந்து அணி 'ஆல் ரவுண்டர்', டெஸ்ட் அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 32. கடந்த 2022, அக்.,ல் ஒருநாள் அரங்கில் இருந்து விடைபெற்றார். முழங்கால் ஆப்பரேஷன் செய்த இவர், பின் தனது முடிவை மாற்றினார். இந்தியாவில் நடந்த உலக கோப்பை தொடரில் பேட்டராக களமிறங்கினார்.

இவரது தலைமையிலான இங்கிலாந்து அணி, சமீபத்தில் இந்திய மண்ணில் 1-4 என தொடரை இழந்தது. தற்போது 'டி-20' உலக கோப்பை தொடரில் (ஜூன் 1-29, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா) தொடரில் இருந்து விலகியுள்ளார்.

கடந்த 2022 பைனலில் சிறப்பாக செயல்பட்ட ஸ்டோக்ஸ், இங்கிலாந்து அணி கோப்பை வெல்ல கைகொடுத்தார். இதன் பின் கடந்த ஒரு ஆண்டாக இரு 'டி-20' போட்டியில் மட்டும் விளையாடினார்.

இதுகுறித்து ஸ்டோக்ஸ் கூறியது:

அனைத்துவித கிரிக்கெட்டிலும் மீண்டும் 'ஆல் ரவுண்டராக' செயல்பட வேண்டும் என விரும்புகிறேன். மறுபடியும் முழுஅளவில் பந்துவீச வேண்டும். இதற்கு தேவையான பயிற்சிகளில் ஈடுபட்டு உடற்தகுதியை மீட்டு எடுக்க கவனம் செலுத்த உள்ளேன். நடப்பு ஐ.பி.எல்., உலக கோப்பை தொடர்களில் இருந்து விலகியதால் எதிர்காலத்தில் எதிர்காலத்தில் 'ஆல் ரவுண்டராக' மீண்டு வர முடியும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us