/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பெங்களூரு-குஜராத் பலப்பரீட்சை * துவங்குகிறது பெண்கள் பிரிமியர் லீக்
/
பெங்களூரு-குஜராத் பலப்பரீட்சை * துவங்குகிறது பெண்கள் பிரிமியர் லீக்
பெங்களூரு-குஜராத் பலப்பரீட்சை * துவங்குகிறது பெண்கள் பிரிமியர் லீக்
பெங்களூரு-குஜராத் பலப்பரீட்சை * துவங்குகிறது பெண்கள் பிரிமியர் லீக்
ADDED : பிப் 13, 2025 10:53 PM

வதோதரா: டபிள்யு.பி.எல்., தொடர் இன்று துவங்குகிறது. முதல் மோதலில் நடப்பு சாம்பியன் பெங்களூரு, குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் பெண்களுக்கான பிரிமியர் லீக் (டபிள்யு.பி.எல்.,) தொடர் நடத்தப்படுகிறது.
மும்பை, டில்லி, குஜராத், பெங்களூரு, உ.பி., என ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் வதோதரா (குஜராத்), லக்னோ (உ.பி.,) என இரு இடங்களில் நடக்க உள்ளன.
இத்தொடரில் சர்வதேச வீராங்கனைகளுக்கு, இந்திய அணியின் இளம் வீராங்கனைகள் சவால் கொடுத்து சிறப்பாக செயல்படுகின்றனர்.
ஸ்ரேயான்கா, சைகா உள்ளிட்ட பலர் இத்தொடரின் சிறந்த கண்டு பிடிப்பாக திகழ்கின்றனர். முதல் இரண்டு சீசனில் மும்பை (2023), பெங்களூரு (2024) அணிகள் கோப்பை வென்றன.
மூன்றாவது சீசன், இன்று குஜராத்தில் உள்ள வதோதராவில் துவங்குகிறது. இன்று நடக்கும் முதல் போட்டியில் ஸ்மிருதி மந்தனாவின் 'நடப்பு சாம்பியன்' பெங்களூரு, கார்டுனர் தலைமையிலான குஜராத் அணிகள் மோத உள்ளன.
கடந்த 'மினி' ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட சிம்ரன் (ரூ. 1.90 கோடி), குஜராத் அணிக்கு கைகொடுக்கலாம்.
ஷபாலி நம்பிக்கை
இரு முறை பைனலுக்கு முன்னேறிய டில்லி அணிக்கு, சமீபத்திய உள்ளூர் போட்டிகளில் அசத்தும் ஷபாலி, 19 வயது உலக கோப்பை தொடரில் சாதித்தது போல, இம்முறை டில்லி அணிக்கு கோப்பை வென்று தரலாம்.
இவருடன் மெக்லானிங், ஜெமிமா, அனாபெல், மரிஜானே, ஷிகா, ராதா என பலர் பலம் சேர்க்கின்றனர்.
ஹர்மன்பிரீத் கவுரின் மும்பை அணியில், ரூ. 1.60 கோடிக்கு வாங்கப்பட்ட தமிழகத்தின் கமலினி, யஸ்திகா, நாட் சிவர் உள்ளனர்.