sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

ஜாம்பா, மார்ஷ் அபாரம்: ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி

/

ஜாம்பா, மார்ஷ் அபாரம்: ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி

ஜாம்பா, மார்ஷ் அபாரம்: ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி

ஜாம்பா, மார்ஷ் அபாரம்: ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி


ADDED : பிப் 20, 2026 10:53 PM

Google News

ADDED : பிப் 20, 2026 10:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லேகெலே: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் அசத்திய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தியது.

இந்தியா, இலங்கையில், ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் நடக்கிறது. நேற்று, இலங்கையின் பல்லேகெலேயில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில், ஏற்கனவே 'சூப்பர்-8' சுற்றுக்கான வாய்ப்பை இழந்த ஆஸ்திரேலியா, ஓமன் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

ஜாம்பா அசத்தல்: ஒமன் அணிக்கு ஆமிர் கலீம் (0) ஏமாற்றினார். கரண் சோனாவலே (12), கேப்டன் ஜதிந்தர் சிங் (17) நிலைக்கவில்லை. ஆடம் ஜாம்பா 'சுழலில்' ஹம்மத் மிர்சா (16), முகமது நதீம் (2) சிக்கினார். அடுத்து வந்த வினாயக் சுக்லா (9), ஜிதேன் ராமானந்தி (1) ஏமாற்றினார். வாசிம் அலி (32) ஆறுதல் தந்தார். ஜாம்பா பந்தில் ஷகீல் அகமது (3), ஷபிக் ஜான் (0) அவுட்டாகினர்.

ஓமன் அணி 16.2 ஓவரில் 104 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஜெய் ஒடெட்ரா (4) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் ஜாம்பா 4, பார்ட்லெட், மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

மார்ஷ் அரைசதம்: சுலப இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்சல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. வாசிம் அலி வீசிய 5வது ஓவரில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி விரட்டிய மார்ஷ், 26 பந்தில் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்த போது ஷகீல் அகமது பந்தில் ஹெட் (32) அவுட்டானார். ஜிதேன் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜோஷ் இங்லிஸ் வெற்றியை உறுதி செய்தார்.

ஆஸ்திரேலிய அணி 9.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 108 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மார்ஷ் (64 ரன், 33 பந்து, 4x6, 7x4), இங்லிஸ் (12) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை ஜாம்பா வென்றார்.






      Dinamalar
      Follow us